Enjoyment பற்றி பெரியார் சொன்னதையே நடிகை விவகாரத்தில் செஞ்சேன்னு வெச்சுக்குங்க.. சீமான் பகீர் பேச்சு
சென்னை: Enjoyment without Responsibility என்பது பற்றி தந்தை பெரியார் பேசியதைத்தான் நடிகை பலாத்கார விவகாரத்தில் தாம் செய்ததாக வைத்துக் கொள்ளலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: இந்த திருட்டுக் கூட்டத்தை (திராவிடம்) தவிர வேறு ஒரு அரசியல் ஆற்றல் இந்த நிலத்தில் முளைத்துவிடக் கூடாது என்கிற அச்சம்தான். ஒரு திருடனுக்கு திருடன் பாதுகாப்பாக இருப்பான். அதை அண்டி, ஒண்டி வாழ்கிறவன் வேறு எதை எதிர்த்துப் பேசுவான்? கம்யூனிஸ்டுகள் திமுகவை எந்த இடத்தில் எதிர்த்து கருத்து சொல்வீர்கள்?

சம்மன் விவகாரம்
தம்பி.. மல்லிகைப்பூவாலும் மயில் இறகாலும் வருடிவிடுவது அல்ல கூட்டணி என்பது.. உங்களால் திமுகவுக்கு எதிராக எதில் கருத்து சொல்ல முடிகிறது? எதில் உங்களுக்கு கருத்து சொல்லத்தான் முடியும்? இவ்வளவு பேசுகிறீங்கள்.. என் வீட்டில் எல்லோரும் இருக்கும் போது, ஆள் இருக்கும் போது, எதுக்கு சம்மனை கதவில் ஒட்டனும்? அது அவசியமானதா? சரி. அந்த சம்மனை ஒட்டியதுடன் காவல்துறையின் வேலை முடிந்துவிட்டதுதானே..
நீ என்ன பெரிய கம்யூனிஸ்ட்?
அந்த சம்மனை கிழித்தால் என்ன? வைத்திருந்தால் உனக்கு என்ன? சம்மனை கிழித்ததற்காக எதற்கு அடித்தாய்? சீருடை இல்லாத காவலர்கள் எதற்காக அடித்து இழுத்துக் கொண்டு போனீங்க?அதுவும் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரரை.. என் வீட்டில் இருக்கும் போது அடித்து இழுத்துட்டுப் போறீங்க.. அடித்து இழுத்துக் கொன்டு போகிற அளவுக்கு ஒரு குற்றமும் இல்லையே.. அவரை சிறைப்படுத்துகிற அளவுக்கு குற்றம் இல்லையே.. இதை பற்றி எல்லாம் பேசாத கம்யூனிஸ்ட் என்ன கம்யூனிஸ்ட்?
நீ எப்படி குற்றவாளி என சொல்லுவ?
விசாரணை இருக்கும் போது என்னை எப்படி நீ குற்றவாளி என சொல்லுவ? தீர்ப்பு வரட்டும்.. தீர்ப்பு வந்த பிறகுதானே பேசனும்? நீயே தீர்ப்பு எழுதி படிப்பியா? மதிப்புமிக்க அரசியல் தலைவர்கள், இதுவரை வாய் திறக்காமல் இப்ப வாய் திறக்க வேண்டிய தேவை என்ன?
Enjoyment without Responsibility
நான் தான் உண்மையில் கம்யூனிஸ்ட்.. ஏனெனில் நீங்க செய்ய வேண்டிய வேலைகளை நான் செய்து கொண்டிருக்கிறேன்.. "Enjoyment without Responsibility" பற்றி நீங்கதான் பேசுறீங்க.. எவனாவது பாசத்துக்கு புள்ளைய பெத்துக்குவானா தேவைன்னா அப்படியே போய்ட்டு வந்துடனும்.. குடும்பம் என எவனாவது வாழ்ந்துகிட்டு இருப்பானா? Enjoyment without Responsibility என அய்யா ஆங்கிலத்திலேயே சொல்கிறாரே" என்று சொன்னது யார்? பெரியார் சொன்னதாக இப்ப இருக்கிற ஒரு அய்யா சொல்கிறார். Enjoyment without Responsibility என சொன்னது உங்க பெரியார்.. அப்படிப்பட்ட பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கீங்க..Enjoyment without Responsibility-ல் உங்க Responsibility என்ன?அம்மையார் கனிமொழிக்கும் சேர்த்துதான் கேட்கிறேன்.. கம்யூனிச தோழர்களுக்கும்தான் கேட்கிறேன்..
பெரியார் சொன்னதைத்தான் செஞ்சேன்..
பெரிய்ய.. பெரியார் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்களே.. அவர் சொன்னதுதான்.. அவர் சொன்னதைத்தான் நான் செஞ்சேன்னு வெச்சுக்குங்க.. அதில் உனக்கு என்ன பிரச்சனையாகுது? ஏம்பா உங்க தலைவர் சொன்னதைத்தானே நாங்கள் கடைபிடிக்கிறோம். அதில் உங்க கருத்து என்னப்பா? என்ன விளையாட்டு பண்ணிகிட்டு இருக்கீங்க?
நடமாடவே முடியாது..
நான் திருப்பி ஒவ்வொன்றையும் பேச ஆரம்பித்தால் நீங்க வெளியில் நடமாட முடியுமா? அமைதியாக போங்க..இவ்வாறு சீமான் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications