அவங்க வாங்குன கடனுக்கு நாங்க வட்டி கட்டுறோம்..அதிமுக எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது! கொந்தளித்த ஐபி!
சென்னை: அதிமுக ஆட்சியில் பெற்ற ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு நாங்கள் 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை வட்டி கட்டி வருகிறோம் எனவும், அதற்கு அவரை பதில் சொல்ல சொல்லுங்கள் என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். மேலும், அதிமுக வரும் தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது என நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னிமாந்துறை பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி பல்வேறு முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், வேளாண் வங்கி துவங்குவதற்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, அதிமுக ஆட்சி வந்தவுடன் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கை கூறியுள்ளனர். ரொம்ப நல்லவர் ! மோடி சொல்லி கொடுத்திருப்பார், பீகாரில் கொடுத்தது போல தேர்தலுக்கு முன்பாக கொடுத்தார்கள். இப்போது நேரடியாக கொடுக்க முடியாது.

ஐ பெரியசாமி
மோடி 15 லட்சம் கொடுப்பேன் என்று சொன்னார். 10 வருடத்திற்கு முன், சொன்னாரே அதை கொடுத்து விட்டாரா? தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் மோடியை 15 லட்சத்தை முதலில் கொடுக்கச் சொல்லுங்கள் அதைக் கொடுத்தால் மக்கள் அனைவரும் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் சில வரிகளை உயர்த்தி இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எடப்பாடி கூறியுள்ளார். அது உண்மைக்கு மாறானது, அவர் ஒன்றும் பொருளாதார நிபுணர் கிடையாது.
நிதிநிலை அறிக்கை
அவர் ஏதும் ப்ரொஜெக்ட் தயார் செய்கிறாரா? நிதிநிலை அறிக்கையில் நேற்று பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள், பேசியதையே பேசி வருகிறார். ஐந்தாண்டு காலங்களாக ஒரே சப்ஜெக்ட்டை தான் பேசி வருகிறார்கள். வேறு எதையும் அவர்கள் பேசவில்லை, எதையாவது போற போக்கில் பேசிட்டு போறார்கள் போகட்டும். பெயருக்கு வந்து செல்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தன்னுடைய கடமையை மாற்றியதாக நான் உணரவில்லை எனக்கு அப்படி தான் தெரிகிறது.
மத்திய அரசு
மத்திய அரசுக்கு செல்லக்கூடிய GST 29 பைசா வரியை திரும்பி வாங்கித் தர சொல்லுங்கள். 70 பைசா திருப்பி வாங்கி தர சொல்லுங்கள். 30 பைசாவை 70 பைசா ஆக மாற்றி வாங்கி தர சொல்லுங்கள். பாலாறும் தேனாறும் தமிழ்நாட்டில் ஓடும். அவருக்கு தலைவர் மோடியும் அமித்ஷாவும் தானே நம்மிடம் வரியை வாங்கி மற்ற மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கிறார்கள்., ஊரான் வீட்டு நெய்யே என்னோட கையே என்பது போல இருக்கிறது. இன்று மத்திய அரசு துரோகம் செய்கிறது. அவருக்கு துணை போகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக எதிர்க்கட்சி
எப்படி அவர் கொடுப்பார்? ஆட்சிக்கு வரப்போவதில்லை எதிர்க்கட்சியாக கூட வராது என்று நான் நினைக்கிறேன். எதிர்க்கட்சி அந்தஸ்து வாங்குவது கூட சந்தேகமா தான் இருக்கிறது. நேற்று பார்க்கிறீர்கள் ஆளாளுக்கு ஒரு கட்சி ஆரம்பிக்கிறார்கள் தேர்தல் முடிவில் அது தெரியும். கூட்டணி சுமுகமாக வந்துள்ளது என வந்துவிட்டது. மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
காங்கிரஸ்
எல்லா கட்சித் தலைவர்களும் வருகிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக தான் செல்கிறார்கள். அதையும் நான் டிவியில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை சீட்டுகள் கேட்டு வருகின்றனர் என கேட்கிறீர்கள். அதற்கு என்று தனி குழு அமைத்து உள்ளனர். அவர்களுக்குத்தான் அது தெரியும்" என்றார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications