விஜய்யின் மாமாவை நேற்று இரவு பார்த்தேன்.. திமுகவை கடுமையாக சாடி காங்கிரஸின் திருச்சி வேலுசாமி பேட்டி
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தவெக உடனான பேச்சுக்கள் குறித்தும் திமுக குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறுகையில், விஜய் அப்பா சந்திரசேகரை பார்த்தது குறித்து கேட்கிறீர்கள்.. அவர் எனக்கு புதியவர் அல்ல.. பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்தவர்.. நேற்று இரவு சந்திரசேகரின் மைத்துனர் சுரேந்தரை நான் டிபன் சாப்பிடும் போது எதேச்சையாக பார்த்தேன்.. நீண்ட காலத்திற்கு பிறகு பார்த்தேன்.
அந்த காலத்தில் அவர் பெரிய பாடகர்.. நல்ல நண்பர் எனக்கு.. வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார் என்னை பொது இடத்திலேயே.. அந்த குடும்பம் எனக்கு புதிது அல்ல. உங்களுக்கு வெளிப்படையாகவே சொல்கிறேன்.. இதில் ஒன்றும் ரகசியமே கிடையாது.. விஜய் நான் இதுவரை பார்த்ததே இல்லை. அவருடைய அப்பா எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் ஆனார். ஆனால் நட்பு ரீதியாக நெருக்கமாக பேசுவதுபோல் இல்லை.. அவருடைய மைத்துனர் சுரேந்தர்..

அதாவது விஜய்யின் தாய் மாமா எனக்கு நெருங்கிய நண்பர்.. நான் அவருடன் இரவு முழுக்க விடிய விடிய பேசிய நாட்கள் எல்லாம் உண்டு.. எஸ்ஏசியை பொறுத்தவரை பெரிய பண்பாளர்.. என்னைவிட அவர் ஏழு வயது மூத்தவர். என்னை முதல் முதலாக பார்த்த நாளில் இருந்தே என்னை அண்ணன் என்று தான் அழைப்பார்.. அவர் என்னை பார்க்க வீட்டிற்கு வருகிறார்.. அவரை வராதீங்க என்று சொல்வேனா.. அல்லது பொது இடத்தில் இருக்கும் போது நீங்கள் இருக்கிறீர்கள்.. நான் வர வேண்டாம் என்று கூற முடியுமா... இந்த பண்பாடு தெரியாமல், ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு பேசினால், நான் என்ன செய்ய முடியும்..
அரசியல் பேசினீர்களா என்று கேட்கிறீர்கள்.. அரசியல் பேசாமல் இருக்க முடியுமா.. எல்லாரும் நல்லா இருக்காங்களா என்று நலம் விசாரித்தோம்.. அறிமுகம் ஆனவர்களை நேசிப்பதுதான் மனித பண்பு. நன்றாக பழகியவர்கள் பேசும் போது, பேசாமல் என்ன செய்வோம். கூட்டணியில் இருக்கும் போது பேசலாமா என்று கேட்குறீங்க..
ஆனால் பெருந்தலைவர் காமராஜர் பற்றி திமுகவைச் சேர்ந்த ஒருவர் தரக்குறைவாக பேசும் போது, கூட்டணி தர்மம் பற்றி கேட்டீர்களா. எந்தஅர்த்தத்தில் பேசினார்களோ..ஆனால் சொன்னது உண்மையா இல்லையா.. திமுக என்ன சுதந்திரத்திற்கு போராடிய கட்சியா.. சுதந்திரத்திற்காக 9 ஆண்டுகள் அடிப்பட்டு, மிதிப்பட்ட காமராஜரை பற்றி அந்த கட்சியில் ஒருவன் கேவலமாக பேசும் போது, அதனை கேட்டு செல்ல நான் என்ன பைத்தியக்காரனா..
அதனை கேள்வி கேட்காத ஊடகங்கள் மூடிவிட்டு போய்விடலாம் என்றார். அப்போது நெரியாளர் கூட்டணியில் இருக்கும் திமுகவை வீழ்த்தியே தீருவேன் என்று கூறுகிறீர்களே இது சரியா என்று நெரியாளர் கேட்டார். அதற்கு கூட்டணியில் இருக்கும் போது என் அப்பா அறைந்து விடுவீர்கள்.. நான் சரி என்று போக வேண்டுமா.. என் அப்பாவை அடித்தால் கூட ஏற்பேன்.. ஆனால் காமராஜரை பற்றி சொன்னால் ஏற்க முடியுமா.. காமராஜரை பற்றிபேச எவனுக்கும் யோக்கியம் இல்லை.. அவர்கள் பேசிய அவதூறுருக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. அப்படி கேட்காதவரை தனிமனிதனாக வேலுசாமி ஒப்புக்கொள்ள மாட்டான்" இவ்வாறு பல்வேறு விஷயங்கள் குறித்து திருச்சி வேலுசாமி பேசினார். முழு வீடியோ செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது. பாருங்கள்.












Click it and Unblock the Notifications