ஹரியானா வன்முறை: கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ஹரியானாவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைகள் நடக்காமல் இருப்பதை ஹரியானா அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். ஹரியானாவில் உள்ள நூ மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கினர். இதைத் தொடர்ந்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால், அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. நூ மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான குருகிராமுக்கும் வன்முறை பரவியது. இந்த வன்முறையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. வன்முறை சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனால், நூ, பரிதாபாத் மற்றும் பல்வால், குருகிராம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இதுவரை கலவரம் தொடர்பாக, 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஏறத்தாழ மூன்று மாதங்களாக பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.
வன்முறையால் மிகவும் கொடூரமாக பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நடந்த சம்பவங்கள் ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கின. மணிப்பூர் சம்பவத்தின் ரணம் இன்னும் முழுமையாக மறைவதற்குள் மற்றொரு பாஜக ஆளும் மாநிலமான ஹரியனாவிலும் வன்முறை வெடித்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
தற்போது நூ மாவட்டத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஹரியனா முதல்வர் மனோகர் லால் கட்டார் வலியுறுத்தியுள்ளர். ஹரியானாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கு உடனே முடிவு கட்ட வேண்டும் என்றும் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் ஹரியானா விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ஹரியானா மாநிலத்தில் அண்மையில் நடந்த மத வன்முறையில் பாதிக்கப்பட்டு, பெரும் வேதனைக்கும் கடுந்துயருக்கும் ஆளாக்கப்பட்டுள்ளோருக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் மனமிரங்குகிறேன்.
அமைதி, அகிம்சை, நல்லிணக்கத்துடன் வாழ்தல் ஆகியவற்றில்தான் உண்மையான வலிமை உறைந்துள்ளது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். வெறுப்புணர்வும் பிரிவினையும் நம்மை ஆட்கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது. கலவரக்காரர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, விரைவில் இயல்புநிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதைத் தக்க முறையில் உறுதிசெய்திட வேண்டும் என்றும் ஹரியானா அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications