ஓட்டு போடச்சொன்னபோது போடல.. ரம்மி பற்றி கூறினால் மட்டும் விளையாடுவாங்களா? கடுப்பான சரத்குமார்
சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான விளம்பரத்தில் நடித்தது பற்றிய கேள்விக்கு, ‛‛ஓட்டுப்போட சொன்னபோது மக்கள் ஓட்டுபோடவில்லை. பணத்துக்கு காசு வாங்காதீங்க என சொன்னபோது கேட்கவில்லை. இப்போது ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததால் தான் மட்டும் விளையாட போறாங்களா?'' என பதலளித்து நடிகர் சரத்குமார் கடுப்பை வெளிப்படுத்தினார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த உண்ணாவிரதத்துக்கு மத்தியில் சரத்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் ஆன்லைன் விளம்பரத்தில் நடித்தது பற்றி அவர் பல்வேறு விஷயங்களை கூறினார். இதுபற்றி நடிகர் சரத்குமார் கூறியதாவது:

ரம்மி அறிவுப்பூர்வமானது
ரம்மியை அனைவராலும் இஸியாக விளையாட முடியாது. ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சரத்குமார் நடித்தால் நான் இதனை சொல்லவில்லை. ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது. ஆன்லைன் ரம்மி போன்று இணையதளத்தில் ஏராளமான விளையாட்டுகள் உள்ளன. நாம் அனைவரும் வேண்டாம் என்று நினைத்தால் இந்த விளையாட்டுக்குள் யாரும் உள்ளே போகமாட்டார்கள்.

நான் சொன்னால் கேட்டுவிடுவார்களா?
நான் யாரையும் கெடுக்கவில்லை. நான் சொல்வதால் அனைவரும் கேட்டு விடுவார்களா என்ன?. ஓட்டு போடுங்கள் என கூறினேன். ஓட்டு போடவில்லையே. ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என கூறியபோதும் கேட்கவில்லையே. இதையெல்லாம் கேட்காத நிலையில் நான் ரம்மி விளையாடுங்கள் என கூறினால் மட்டும் கேட்டு விடுவார்களா?.

சட்ட அமைச்சரிடம் கோரிக்கை
இருப்பினும் கூட தமிழ்நாட்டில் விரைவில் சட்டம் இயற்றுங்கள் என சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நானே கூறியிருக்கிறேன். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு இப்போது தான் சட்டம் இயற்றி உள்ளனர். நான் 2 ஆண்டுகளுக்கு முன்பே விளம்பரத்தில் நடித்துவிட்டேன். இங்கு சரத்குமார் நடித்தது மட்டும் தான் தவறாக தெரிகிறது. மற்றவர்கள் நடித்தது எதுவும் தவறாக தெரியவில்லை.'' என்றார்.

ரஜினி பாவம்
மேலும் ‛‛ஒன்றை யாரும் திணிக்க முடியாது. விளம்பரத்தில் சிகரெட் வந்தாலும் எனது தந்தை, நான் சிகரெட் பிடிப்பது இல்லை. ஒருவரின் வாயில் கட்டாயமாக சிகரெட்டையோ, மதுபானத்தையோ வைக்க முடியாது. அதுபோல் தான் ஆன்லைன் விளையாட்டும்'' என்றார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ரஜினிகாந்த சிகரெட் பிடித்ததால் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. ஒரு கட்சி பெரிய போராட்டம் நடத்தியது. இப்போது ரஜினிகாந்த் சிகரெட்டை நிறுத்திவிட்டார்'' எனக்கூறி ஒரு கேள்வியை கேட்க முயன்றார். அப்போது சட்டென குறுக்கிட்ட சரத் குமார், ‛‛ரஜினிகாந்தை ஏன் இழுக்கிறீர்கள். அவர் பாவம். நேற்று தான் அவருக்கு பிறந்தநாள்'' எனக்கூறினார்.

ஒப்புதல் அளிக்காத ஆளுநர்
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் சிலர் பணத்தை இழந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான விளம்பரத்தில் நடித்தது பற்றிய கேள்விக்கு, ‛‛ஓட்டுப்போட சொன்னபோது மக்கள் ஓட்டுபோடவில்லை. பணத்துக்கு காசு வாங்காதீங்க என சொன்னபோது கேட்கவில்லை. இப்போது ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததால் தான் மட்டும் விளையாட போறாங்களா?'' என பதலளித்து நடிகர் சரத்குமார் கடுப்பை வெளிப்படுத்தினார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications