புகைப்பட கலைஞனாக வேண்டுமென ஆசைப்பட்டேன்.. காலம் அரசியல்வாதியாக மாற்றிவிட்டது.. உதயநிதி ஸ்டாலின்!

புகைப்படம் கலைஞராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்லூரி காலங்களில் புகைப்பட கலைஞராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் காலம் என்னை அரசியல்வாதியாக மாற்றியதாக குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், புகைப்படங்கள் வரலாற்று சாட்சியாக இருப்பதாக கூறினார்.

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் காலத்தால் கரையாத காட்சிகள் புகைப்படக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள லலித்கலா அகாடமியில் பிப்.10ம் தேதி தொடங்கியது.

ஒரு வாரம் நடைபெற்ற இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புகைப்பட கலைஞர்கள் சங்கம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சங்கத்தில் பல்வேறு பத்திரிக்கைகளை சேர்ந்த, புகைப்படக் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சி

இந்த கண்காட்சியில் பத்திரிகைகளில் வெளிவந்திருந்த முக்கியமான செய்திகளின் புகைப்பட தொகுப்பும் இக்கண்காட்சியில் இடம்பெறும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சிக்கு ஏராளமானோர் வந்து புகைப்படங்களை கண்டு ரசித்தனர். இந்த நிலையில் புகைப்பட கண்காட்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி, நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உதயநிதி ஸ்டாலின் பேச்சு

உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நின்று பேசுகையில், அனைவரும் அமர்ந்து பேசுமாறு வலியுறுத்தினர். அப்போது, சிலருக்கு உட்கார்ந்தால் பேச்சு வரும். சிலருக்கு நின்றால் பேச்சு வரும். அதனால் நான் நின்று கொண்டே பேசுகிறேன் என நகைச்சுவை பேச்சை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், அழையா விருந்தாளியாக வந்துள்ளேன். ஒரு மணி நேரம் புகைப்படங்களை பார்த்தேன்.

புகைப்பட கலைஞர்கள்

புகைப்பட கலைஞர்கள்

எந்த விழாவிற்கு வருகை தந்தால் ஏதாவது சொல்ல மாட்டானா? கண்டெண்ட் கிடைக்காதா? என செய்தியாளர்கள் மைக்குடன் ஆவலாக வருவார்கள். பேசாமல் போயிருவோம். ஆனால் புகைப்பட கலைஞர்களிடம் இருந்து தப்ப முடியாது. இந்த கண்காட்சியில் அனைத்து புகைப்படங்களும் சிறப்பாக இருந்தது.

உதயநிதி ஸ்டாலினின் ஆசை

உதயநிதி ஸ்டாலினின் ஆசை

புகைப்படங்கள் வரலாற்று சாட்சியாக உள்ளன. நானும் புகைப்பட கலைஞராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் காலம் என்னை அரசியலுக்கு அழைத்து வந்துவிட்டது. தமிழ்நாட்டின் அனைத்து போராட்டங்களின் சாட்சியும் இந்த கண்காட்சியில் புகைப்படங்களாக இடம்பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அரசியல் தலைவர்களின் பங்களிப்புகள் என பல புகைப்படங்கள் கவர்ந்தது என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+