நான் பிறந்தது கிறிஸ்தவ குடும்பம்.. ஆனால் மனிதனாக வாழ்கிறேன்.. எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு!
சென்னை: "நான் பிறந்தது கிறிஸ்தவ குடும்பம். ஆனால் மனிதனாக வாழ்ந்து கொண்டிருகிறேன்." என நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி என 70 படங்களை இயக்கியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது பங்களிப்பை பாராட்டி எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் சார்பில் 'திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "நான் பிறந்தது கிறிஸ்தவ குடும்பம். ஆனால் மனிதனாக வாழ்ந்து கொண்டிருகிறேன். மனிதம் ஒன்று தான் மதம். மதம் நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்திருக்கிறது. கிறிஸ்தவருக்கு பைபிள், இந்துக்களுக்கு கீதை, முஸ்லீம்களுக்கு குரான். அதில் இருக்கிற நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்.
இயேசு, நபிகள் நாயகம் எல்லாம் அவதாரங்கள். கடவுளின் செய்தியைக் கொண்டு வந்த இறை தூதர்கள். நான் ஏசுவை தொடரவில்லை. அவர் சொன்ன மெசேஜை பின்பற்றுகிறேன். மெசெஞ்சரில் சொல்வதை அல்ல. இயேசு ஒரு மெசெஞ்சர். அவர் சொன்ன மெசேஜை பின்பற்றுகிறேன். அவரை அல்ல" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், "இந்த விருதை எனது மனைவிக்கு கொடுத்து இருக்க வேண்டும். அவரது சாதனைகள் வெளியே தெரியவில்லை. என்னை மனிதனாக மாற்றியது எனது மனைவி. எந்த நடிகனின் அப்பாவையும், அவரது ரசிகர்கள் அப்பா என கூறியதில்லை. ஆனால், என்னை அப்பா என்று அழைக்கின்றனர்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications