வந்தேறின்னு சொல்றீங்கல்ல.. அவங்களுக்கு மட்டும் ஏன் ஆதரவு.. நானும் முஸ்லீமா மாறட்டா.. ராதாரவி கேள்வி
பாஜக பேரணியில் முஸ்லீமாக மாற தயார் என்று ராதாரவி தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: "நான் ஒரு தெலுங்கர், என்னை வந்தேறின்னு சொல்றீங்க.. அப்படின்னா, பங்களாதேஷில் இருந்து வந்தவனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஏன்? இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் நானும் முஸ்லீமாகவே மாற தயாராக உள்ளேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
நடிகர் ராதாரவி இணையாத கட்சிகளே இல்லை.. கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் ஒரு ரவுண்டு போய் வந்துவிட்டார்.. தற்சமயம் ஐக்கியமாகி உள்ளது பாஜகவில்.

"சுயநலத்திற்காக கட்சி தாவுபவர்".. "திராவிட பாரம்பரிய கொள்கையை அடகு வைத்து விட்டவர்" போன்ற பல விமர்சனங்கள் இவர் மீது எழுந்துகொண்டே உள்ளன.
இந்நிலையில் சென்னையில் பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான பிரச்சார பேரணி நடந்தது.. இதில் ராதாரவியும் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய பேச்சு இப்போது வரை இணையத்தில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
ராதாரவி பேசும்போது, "நான் இவ்வளவு நாட்களாக ஏமாற்று கூட்டத்தில் இருந்தேன்.. இப்பதான் அதில் இருந்து விடுதலை பெற்றுள்ளேன்... குடியுரிமை சட்டத்தை எல்லோரும் எதிர்க்கிறார்கள்... ஒரு சில முஸ்லிம்கள் கத்தும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம்.. அப்படிக் கத்துபவர்களை கூட்டிச்சென்று பாகிஸ்தானில் விட்டுவிட்டால் அவர்களை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளுமா? இல்லை ஆப்கானிஸ்தான் ஏற்றுக் கொள்ளுமா? இது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் இல்லை.. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.. ஒருவேளை இது இந்திய முஸ்லிம்களை பாதித்தால் நானே முஸ்லிமாக மாறிவிடுவேன்.
நான் ஒரு தெலுங்கர், என்னை வந்தேறின்னு சொல்றீங்க.. அப்போ எதுக்கு பங்களாதேஷில் இருந்து வந்தவர்களுக்கு குரல் தர்றீங்க? குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், பேரணியில் கலந்து கொண்டவர்கள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியாவில் அவர்களுக்கு தெரியாமல் தங்க முடியுமா? துரத்தி விடுவார்கள்! அப்படி இந்தியாவில் சொன்னால் மட்டும் என்னை தவறாக புரிந்து கொள்கிறார்கள்" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications