நாங்க என்ன கருவேப்பிலையா? விடமாட்டோம்... நிச்சயம் போட்டியிடுவேன் - அதிரடி கிளப்பிய ராதிகா
சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கோவில்பட்டி அல்லது வேளச்சேரி தொகுதியில் போட்டியிடப்போகிறார் ராதிகா சரத்குமார். புதிய அணியை உருவாக்கி தேர்தலில் களமிறங்கும் ராதிகா வெற்றிக்கனியை பறிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: நாங்க என்ன கருவேப்பிலையா? கொத்தமல்லியா? எங்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய.. இந்த முறை விடமாட்டோம் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் ராதிகா சரத்குமார். கோவில்பட்டி, வேளச்சேரி தொகுதியில் போட்டியிடச்சொல்லி கேட்கிறார்கள். கடவுள் கட்டளையிட்டால் நிச்சயம் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார் ராதிகா.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் தவிர வேறு யாரும் தலைவர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடாததால் மீண்டும் சரத்குமார் அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து பதவி பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.

சமக முதன்மை துணைப்பொதுச்செயலாளர்
புதிதாக கட்சியில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மை துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக ஏ.என் சுந்தரேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.

வேளச்சேரியில் களமிறங்கும் ராதிகா
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய துணைப்பொதுச்செயலாளர் விவேகானந்தன். நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் ராதிகா சரத்குமார் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். பல தேர்தல்களில் பிரச்சாரம் செய்துள்ள ராதிகா முதன்முறையாக சட்டசபைத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கப்போவதாக அறிவித்தார்.

ஆரம்பமே அதிரடி
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராதிகா, அவருக்கு பயம் எதுவும் கிடையாது அன்புக்கு மட்டுமே சரத்குமார் கட்டுப்படுவார் என்றார். சமத்துவ சொந்தங்கள் காட்டும் அன்பை வைத்து அவர் சாதிப்பார். இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் தேர்தல் என்றும் குறிப்பிட்டார்.

விடமாட்டோம் நாங்க
நாங்க என்ன கறிவேப்பிலையா? கொத்தமல்லியா? இந்த முறை விடமாட்டோம். நிச்சயம் போட்டியிடுவோம் என்று சொன்னார். வேளச்சேரி, கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடச்சொல்லி சொல்லியிருக்கிறார்கள். கடவுள் கட்டளையிட்டால்... என்று சொல்லிவிட்டு எனக்கு கடவுள் சரத்குமார்தான் அவர் சொன்னால் நான் போட்டியிடுவேன் என்று அதிரடியாக பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications