Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் சாகும் வரை முஸ்லீம் தான் பிரதர்.. மாறவே மாட்டேன்.. நெட்டிசன் கேள்விக்கு குஷ்பூ கொடுத்த ரிப்ளை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நான் சாகும் வரை முஸ்லீம் தான் பிரதர்.. நான் மதம் மாறவும் இல்லை. மாறவும் மாட்டேன்." என நெட்டிசன் ஒருவரின் கேள்விக்கு குஷ்பூ பதில் அளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த குஷ்பூவுக்கு திருச்சி அருகே கோவில் கட்டப்பட்டது. நடிகைக்கு கோவில் கட்டிய அபூர்வமான சம்பவம் அப்போதுதான் நடந்தது. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குஷ்பூ அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். திமுக, காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து தற்போது பாஜகவில் உள்ளார் குஷ்பூ. மேலும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

 I will still die as a muslim brother, I havent changed my religion: Khushbu tweet

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பூ, சமூகத்தில் நடைபெறும் பல பிரச்சனைகள், அரசியல் நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை துணிச்சலாக தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். பாஜகவில் சேர்வதற்கு முன்பு, பாஜக பற்றியும், பிரதமர் மோடியைப் பற்றியும் விமர்சித்த பதிவுகளையும் அப்படியே வைத்துள்ளார் குஷ்பூ. அவை அன்றைய காலகட்டத்தில் என்னுடைய நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

 I will still die as a muslim brother, I havent changed my religion: Khushbu tweet

இந்நிலையில், பாஜக அரசு குறித்து குஷ்பூ விமர்சித்திருந்த பழைய பதிவு ஒன்றை நெட்டிசன் ஒருவர் எடுத்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார். அந்தப் பதிவுக்கு குஷ்பூ தற்போது பதிலளித்துள்ளது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

"நான் ஒரு முஸ்லீமாக பிறந்தேன். இறக்கும் போதும் முஸ்லீமாகவே இறப்பேன். ஒரு போதும் அதை நான் மாற்ற மாட்டேன். அது எனக்கு ஒரு பொருட்டல்ல. நான் மதத்தை சார்ந்த ஆட்சியில் வாழாதவள். இரக்கம், மனிதாபிமானம், அனைவருக்கும் சம உரிமை, பெண்களின் உரிமை, நல்லிணக்கம், பன்முகத்தன்மை அடிப்படையில் வாழ்கிறேன். பாஜகவுக்கு வெவ்வேறு விதிகள் உள்ளன என நினைக்கிறேன்" என அப்போது பதிவிட்டிருந்தார் நடிகை குஷ்பூ.

குஷ்பூவின் இந்த பதிவை தற்போது பகிர்ந்துள்ள ரசிகருக்கு குஷ்பூ ட்விட்டர் பதிவு மூலம் பதில் அளித்துள்ளார். அதில், "நான் சாகும் வரை முஸ்லீம் தான் பிரதர். நான் மதம் மாறவும் இல்லை. மாறவும் மாட்டேன். உங்களைப் போன்ற சில ஆட்கள் தான் மதத்தை கொண்டு பிரிவினைகளை பற்றி யோசிக்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படியில்லை. என்னை பொறுத்தவரையில் ஆன்மிகம் என்பது ஒருமைப்பாடு நிலை பற்றியது. கடவுள் ஒருவர் தான் என்பதை நான் நம்புகிறேன். அனைவராலும் வணங்கப்படும் கடவுள் ராமர். உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்தி பார்க்கும் போது நல்லவற்றை உணர்வீர்கள்" என பதிலளித்துள்ளார்.

குஷ்பூவின் இந்தப் பதிவு தற்போது ஏராளமானோரால் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவுக்கு குஷ்பூவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் தான் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முடியவில்லை எனத் தெரிவித்து ராமர் பாடல் ஒன்றை பாடியிருந்தார். மேலும், பிரதமர் மோடியின் ஆட்சியில் தான் ராமரை பார்க்க இருக்கிறோம் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+