ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.. நண்பர் சூப்பர் ஸ்டார் விரைவில் குணம்பெற வேண்டும்! மு க ஸ்டாலின்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நள்ளிரவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படமானது வரும் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். எப்போதும் பிசியாக சூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று நள்ளிரவில் சென்னை கிரீம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அட்மிட் ஆனார். அங்கு அவருக்கு முதற்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைந்து குணமாக வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நண்பர் ரஜினிகாந்த் விரைந்து குணம்பெற விழைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் ரசிகர்களும் ரஜினிகாந்த் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
73 வயதான நடிகர் ரஜினிகாந்துக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஈசிசி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அம்மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் இன்று ரஜினிகாந்திற்கு காலை 9 மணிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து சூட்டிங்கில் பங்கேற்றது, அடிக்கடி பயணம் மேற்கொண்டதன் காரணமாக தான் ரஜினிகாந்துக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று மாலை ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications