Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Beela Venkatesan: உண்மையிலேயே இரும்பு மனுஷி தாங்க.. முகத்தைப் பார்க்க விடாதீங்க! பீலா வெங்கடேசனின் கடைசி ஆசை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் பீலா வெங்கடேசனின் ஐஏஎஸ்-ன் மரணம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை அவரது கணவர் ராஜேஷ் தாஸ் அவரது உடலை பார்க்க கூட வரவில்லை. தான் மரணம் அடைந்தாலும் தனது முகத்தைக் கூட பார்க்க கணவரை அனுமதிக்க கூடாது என மரணப்படுக்கையில் தனது தாயிடம் பீலா ஐஏஎஸ் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் மூலம் ராஜேஷ் தாசுக்கு இந்த தகவல் சொல்லப்பட்டதால் தான் இறுதிச் சடங்கில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை என்கின்றனர்.

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக மக்களின் மனதில் நம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா வெங்கடேஷன் கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

கடந்த சில மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், தீராத தலைவலி மற்றும் மூளையில் ஏற்பட்ட புற்றுநோய்க்கட்டியால் அவதிப்பட்டு, புதன்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக நிர்வாக அமைப்பிற்கும் மக்களுக்கும் பெரும் இழப்பு என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

IAS Beela Venkatesan s Beela Rajesh Last Wish

பீலா வெங்கடேசன்

தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தைச் சேர்ந்தவரான பீலா வெங்கடேஷன், பிறந்ததும், வளர்ந்ததும், கல்வி கற்றதும் அனைத்தும் சென்னையில்தான். சாத்தான்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேஷன் மற்றும் முன்னாள் டிஜிபி எஸ்.என். வெங்கடேஷன் ஆகியோரின் மகளாக அரசியல் மற்றும் நிர்வாக பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். கல்வியிலும் திறமையிலும் சிறந்து விளங்கிய அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று, மருத்துவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

பீலா ஐஏஎஸ் மரணம்

ஆனால், மக்களுக்கு மேலும் சேவை செய்ய வேண்டும் என்ற கனவுடன் இந்திய குடிமைப் பணியில் சேர முயன்றார். அந்த முயற்சியில் வெற்றி பெற்று, 1997ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் தனது பணியைத் தொடங்கிய பீலா, மத்திய ஜவுளித்துறை மற்றும் ஹோமியோபதி துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். பின்னர் தமிழக கேடரைப் பெற்று மாநிலத்துக்கு வந்த அவர், செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத்துறை இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் சிறப்பாக பணியாற்றினார்.

சுகாதாரத்துறை செயலாளர்

2019ஆம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்ற பீலா வெங்கடேஷன், கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு நேரடியாகத் தகவல் வழங்கி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொண்டார். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தியதோடு, நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் பெரும் பங்கை வகித்தார். மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கிய முகமாக அவர் விளங்கினார்.

ராஜேஷ் தாஸ்

பீலா ஐஏஎஸ், முன்னதாக ஐ.பி.எஸ் அதிகாரி ராஜேஷ் தாஸைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் குடும்ப பிரச்சினைகள் காரணமாக விவாகரத்து பெற்ற அவர், "பீலா ராஜேஷ்" என்பதிலிருந்து "பீலா வெங்கடேஷன்" எனப் பெயரை மாற்றிக் கொண்டார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்; ஒருவர் திருமணமானவர், மற்றவர் வெளிநாட்டில் கல்வி கற்கிறார். கடந்த சில மாதங்களாக மூளையில் கண்டறியப்பட்ட புற்றுநோய்க்கட்டியால் அவதியுற்ற பீலா, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார்.

மு.க.ஸ்டாலின்

பல மாதங்கள் நடந்த சிகிச்சை பலனளிக்காத நிலையில், புதன்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவு நிர்வாகத்துறையினரிடமும், பொதுமக்களிடமும் துயரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பீலா வெங்கடேசனின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு சுமார் 12 மணி நேரம் பொதுமக்கள் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். ஆனால் கடைசிவரை பீலா வெங்கடேசனின் கணவரான ராஜேஷ் தாஸ் வரவே இல்லை.

பீலா இறுதிச்சடங்கு

இந்த நிலையில் தான் அவர் வராததற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பாலியல் புகாரில் சிக்கியதில் இருந்து ராஜேஷ் தாஸ் மீது கடும் கோபத்திலும் மன வருத்தத்திலும் இருந்திருக்கிறார் பீலா. தொடர்ந்து தனது பெயரை பீலா ராஜேஷ் என்பதிலிருந்து பீலா வெங்கடேசன் எனவும் மாற்றிக் கொண்டார். இதற்கிடையே விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் தனது மரணத்தை முன்கூட்டியே கணித்திருக்கிறார் பீலா. தொடர்ந்து மரணப்படுக்கையில் இருந்த ஒரு தனது அம்மா மற்றும் மகள்களிடம் தான் ஒருவேளை இறந்துவிட்டாலும் தனது முகத்தை கூட பார்க்க ராஜேஷ் தாஸ் வரக்கூடாது அவரை அனுமதிக்க கூடாது என திட்டவட்டமாக சொல்லியதாக சொல்லப்படுகிறது.

இறுதிச் சடங்கு

தொடர்ந்து பீலா மரணம் அடைந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் பாதுகாப்போடு தான் பீலா வெங்கடேசனின் இறுதிச்சடங்குகள் நடந்திருக்கிறது. அந்த முன்னாள் எம்எல்ஏ மூலம் ராஜேஷ் தாஸுக்கு தகவல் அனுப்பப்பட்டு, இறுதிச்சடங்கில் எந்தவித பிரச்சனையும் செய்யக்கூடாது, நீங்கள் வரவே கூடாது என அறிவுறுத்தப்பட்டதாம். இதை அடுத்து அந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளுக்கு ராஜேஷ் தாஸ் வரவில்லை என்கின்றனர் பீலா வெங்கடேசனின் குடும்ப நண்பர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+