ஐஏஎஸ், ஐபிஎஸ் குடியிருப்பில் ஐஸ்வர்யா.. சினிமா பிரபலங்கள் சிக்குறாங்களா? யாரிந்த சென்னை பெண் பாருங்க
சென்னை: சென்னையில் பிரபல ஓட்டலில், பேச்சிலர் பார்ட்டி வைக்கப்பட்டுள்ளது.. தங்களது காதல் திருமணத்துக்கு உதவி செய்த, நண்பர்கள், தோழிகளுக்கு இநத பார்ட்டியை வைத்துள்ளார் புதுமாப்பிள்ளை.. அப்போதுதான் இந்த பயங்கரம் நடந்துள்ளது.. மொத்தம் 10 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்த நிலையில் ஐஸ்வர்யாவை மட்டும் காணவில்லை.. என்ன நடந்தது? யாரிந்த ஐஸ்வர்யா?
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான சந்தோஷ்.. (27). இளம் தொழிலதிபரான இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.. ஆனால், இவர்களது திருமணத்துக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால், நண்பர்கள், தோழிகள் உதவியுடன் காதலியை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து தன்னுடைய திருமணத்திற்கு உதவி செய்த நண்பர்கள், தோழிகளுக்கு, பேச்சுலர் பார்ட்டி வைக்க சந்தோஷ் முடிவு செய்தார்.. இதற்காக கடந்த 13ம் தேதி, எம்ஆர்சி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் மதுபானம், போதை பொருட்களுடன் பல லட்சம் செலவில் ஏற்பாடுகளை செய்தார்..
பேச்சுலர் பார்ட்டி
இந்த விருந்தில், சந்தோஷின் நெருங்கிய நண்பர்கள் ஜெகதீஸ்வர், ஐஸ்வர்யா இருவரையும் வைத்து ஓஜி கஞ்சா பார்ட்டி தந்துள்ளார்.. இதில் சூளை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர், ஐஸ்வர்யா இருவருமே சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்களாம்.. இவர்கள்தான் ஓஜி கஞ்சாவை மதுவிருந்தில் சப்ளை செய்துள்ளனர்.. சில நண்பர்களுக்கு இளம் பெண்களும் சப்ளை செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்த தகவல் பட்டினப்பாக்கம் போலீசாருக்கு கிடைக்கவும், விரைந்து வந்து ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.. அப்போது உயர் ரக ஓஜி கஞ்சா, சாதாரண கஞ்சா, வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை சப்ளை செய்யப்பட்டது உறுதியானது.
புதுமாப்பிள்ளை கைது
இதையடுத்து, புதுமாப்பிள்ளை சந்தோஷ், ஜெகதீஸ்வர், கஞ்சா அடித்த தீபக் (27), ஆராதாத அக்ஷய்ராஜீ (21), ரோகித் (21), கிருஷ்ணபரிக் (20), மனிஷ் (22), சரத்குமார் (32), மதன்குமார் (29), ஜிலான் (28), காமேஷ் (25) என 10 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.. அவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சா, 48 மில்லிகிராம் ஓஜி கஞ்சா, 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓஜி கஞ்சா எப்படி கிடைத்தது என்று ஜெகதீஸ்வர், சந்தோஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், தங்களது நெருங்கிய தோழியான ஐஸ்வர்யா (24) என்பவர் திருச்சி கைலாசபுரத்தை சேர்ந்த பெவன் ஆண்டனி பிரேசர் (23) என்பவர் மூலம் ஆந்திராவில் இருந்து வாங்கியதாக கூறினார்கள்..
சுற்றிவளைத்து கைது
இதையடுத்து, ஆவடியில் தங்கியிருந்த பெவன் ஆண்டனி பிரேசர் என்பவரை கைது செய்து செய்த போலீசார் அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா, கஞ்சா புகைக்க பயன்படுத்தப்படும் OCB Paper-32. Crusher Box-1 மற்றும் 1 ஐபோன் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
ஆனால், மொத்த பேரையும் போலீசார் கைது செய்தாலும், ஐஸ்வர்யா சிக்கவில்லை.. இதனால், அவரது செல்போன் சிக்னல் , மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் விசாரணை நடத்தியபோது, விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் குடியிருப்பில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
ஐஸ்வர்யா சிக்கினார்
இதையடுத்து, போலீசார் விடிகாலையில் ஐஸ்வர்யாவையும் கைது செய்துவிட்டனர்.. அவரிடமிருந்த செல்போன் மற்றும் வழக்கு தொடர்பான சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதை பொருள் விற்கக்கூடிய டீலர்களுடனேயே நேரடியான தொடர்பில் இருப்பவராம் ஐஸ்வர்யா.. அவர்கள் மூலம்தான், இளம் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களுக்கு ஓஜி வகை கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது அம்பலமாகியுள்ளது.. இதுகுறித்த ஆதாரங்களையும் போலீசார் பெற்றுள்ளனர்..
ஐஸ்வர்யாவிடம் தொடர் விசாரணை நீடித்து வரும் நிலையில் சென்னையில் கஞ்சா சப்ளை செய்து வரும் மேலும் பல பெண்கள் போலீசில் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications