IAS: செங்கல் சூளை தொழிலாளியின் மகன்.. 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரி! சாதித்த நெல்லை இளைஞர்
நெல்லை: நெல்லை மாவட்டம் வி.கே புரத்தை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி மகன் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தனது 22 வயதில் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் படிப்பினால் எந்த உயரத்தையும் அடையலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சாதித்து காட்டியதோடு மற்ற இளைஞர்களுக்கும் நம்பிக்கை விதையினை ஊட்டியிருக்கிறார் இந்த சுப்பிரமணிய பாரதி.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி (UPSC), ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் (வனத்துறை) உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்பி வருகிறது. நாட்டில் உள்ள அரசு பதவிகளில் உயர்ந்த பதவியாக இவை இருக்கின்றன.

முதல் முயற்சியிலேயே தேர்ச்சி
இதனால் சிறுவயதில் இருந்தே சிலர் கலெக்டர் ஆக வேண்டும் என நினைத்து அதற்காக படித்து வருவார்கள். நாட்டின் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியங்களில் ஒன்றாக ஐஏஸ் பதவி இருந்து வருகிறது. ஆனால் சிலர் ஏழ்மையை நினைத்து படிக்காமல் விட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நம்பிக்கையூட்டும் விதமாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.
கல்விக்கு ஏழ்மை தடை இல்லை என்பதை இந்த மாணவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். மேலும் இதற்கு தமிழக முதல்வரின் நான் முதல்வன் திட்டமும் கை கொடுத்துள்ளது. நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தை சாதாரண ஏழை விவசாயி குடும்பத்தை சேர்ந்தவர் சுப்பிரமணிய பாரதி (வயது 22). இவரது தந்தை செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்.
12 வரை தமிழ் வழியில் தான் படித்தேன்
தந்தையின் மாத வருமானமே ரூ.6,500 தான். அப்படிப்பட்ட குடும்ப சூழலிலும் கூட தொடர்ந்து படித்து தற்போது தன் முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார். இது குறித்து சுப்பிரமணிய பாரதி கூறுகையில், இதற்கெல்லாம் என் அம்மா அப்பா தான் காரணம்..
சிறு வயதில் இருந்தே நான் படிப்பதற்கு என் அம்மா தான் காரணம்.. எனக்கு அவங்க தான் பாரதி என பெயர் வைச்சாங்க.. 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் தான் படித்தேன். ஆனால் இப்போது நான் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவேன். இண்டர்வியூ கூட ஆங்கிலத்தில் தான் அட்டண்ட் பண்ணினேன்.. ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது கிடையாது. நான் பள்ளியில் எக்ஸாம் எழுதியதில் ஸ்காலர்ஷிப்பாக ஆயிரம் ரூபாய் வரும்.
நன்றாக தூங்கி 4 வருஷம் ஆகுது!
அதை வைத்தும், அடிக்கடி பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி என எல்லாவற்றிலும் கலந்துகொள்வேன்.. இதன் மூலமாக கிடைக்கும் பரிசுத் தொகையினை வைத்தும் குடும்ப செலவுகளை பார்த்துக்கொண்டோம். நான் முதல்வன் திட்டம் எனக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. மாதம் மாதம் ரூ.7,500 கொடுத்தது எனக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. " என்று கூறினார்.
அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் கூறுகையில், உறவினர்கள் கூட எதாவது சொல்லுவங்க.. அதனால் தான் இரண்டு வருஷத்திற்கு யார் கூடவும் பேசக்கூடாது என்பதற்காக செல்போனில் கூட நம்பரை பிளாக் செய்திருந்தோம்.. புல்லாங்குழல் வாசிப்பான், பேச்சுப்போட்டிக்கு செல்வான், கலைஞர் கையால் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கான்.. கஷ்டப்பட்ட பிள்ளைங்களுக்கு நல்ல உதவிய செய்யனும்.. அகில இந்திய ரேங்கில் 768வது ரேங்க் எடுத்து இருக்கிறார். அவன் சரியாக தூங்கி 4 வருஷங்கள் ஆகுது" என்று கூறினர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications