ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்.. 3 மாவட்ட கலெக்டர்களை மாற்றி தலைமை செயலர் உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, 3 மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்ளிட்ட 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

1. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
2. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
3. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
4. செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. சிப்காட் நிர்வாக இயக்குநராக இருந்த சுந்தரவள்ளி ஐ.ஏ.எஸ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக இருந்த வீரராகவ ராவ், தொழில்நுட்பக் கல்வி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8. திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ருதஞ்சய் நாராயணன், விழுப்புரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் முதன்மை செயலர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள், 16 ஐபிஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.


-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications