TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் உட்பட.. 8 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்!
சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரி சண்முக சுந்தரம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "ஆர். ஜெயா, இ.ஆ.ப.: தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் உள்ள இவர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு முயற்சிகள் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிப்-28 அன்று பணி ஓய்வு பெறும் டாக்டர் கே. கோபால் அவர்களுக்குப் பதிலாக இந்த நியமனம் செய்யப்பட்டிருக்கிறது.

கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப.: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த இவர், இயக்குநர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ந. சினேகா, இ.ஆ.ப.: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இவர், தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் (ஆட்சியர்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப.: செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியராக இருந்த இவர், உயர்வு பெற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறவி குமார், இ.ஆ.ப.: பொன்னேரி சார் ஆட்சியராக இருந்த இவர், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திரு க. தங்கவேல் அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சந்திர சேகர் சாகமூரி, இ.ஆ.ப.: மத்திய அரசுப் பணியிலிருந்து திரும்பிய இவர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சண்முக சுந்தரம், இ.ஆ.ப.: இவர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தே. பொன்மணி, இ.ஆ.ப.: இவர் ஈரோடு மண்டல வணிகவரி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications