7 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்.. பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு.. விசிட் முடிஞ்சதுமே!?
சென்னை : 7 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா சென்று வந்த குழுவில் பணீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ் இடம்பெற்றிருந்தார்.
போக்குவரத்து துறை ஆணையராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக கூட்டுறவு சொசைட்டி பதிவாளராக செயல்பட்டவர். சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை, சேலம் மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி ஆணையராக கே.ஜே.பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி கமிஷணராக இருந்த சிம்ரன் ஜீத் சிங் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக உள்ள பாலச்சந்தர் சேலம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக எல்.நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மை செயலரான போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, அண்மையில் ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்கும் பணிக்காக ஒடிசாவுக்கு சென்ற தமிழ்நாடு அரசின் குழுவில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு துறைகளுக்கான செயலர்களும் மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications