ஓயோ ஹோட்டல் ரூமில் ஐசிஐசிஐ வங்கி ஊழியர் ஷீபா.. கதவை திறந்து உள்ளே சென்ற போலீஸ்.. அங்கே பார்த்தால்?
சென்னை: இளம் தம்பதிகளின் விவாகரத்துகள் பெருகி வருவதாக நீதிமன்றங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றன... குடும்ப வன்முறைகள் அதிகரித்துவிட்டதாக, மனநல மருத்துவர்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.. இதற்கு நடுவில் கள்ளக்காதல்கள் கொடூரங்களும் அரங்கேறி வருகின்றன.. புரிதல் குறைவு, பக்குவமின்மை போன்ற காரணங்களினால் வன்முறை சம்பவங்கள் பெருகுவதாக கூறப்படுகிறது.. அந்தவகையில், இளம் தலைமுறையினரின் படுகொலைகளும் அதிகரித்து வருகின்றன. இதோ ஓயோ ஓட்டலில் மீண்டும் நடந்துள்ளதை பாருங்கள்
உத்தர பிரதேசத்தில் தகாத உறவில் ஈடுபட்டு, மீண்டும் ஒருவர் பொதுவெளியில் அம்பலப்பட்டுள்ளார்.. அதிலும் மணமான பெண் ஒருவர், ஒட்டுமொத்த பேரின் முன்னிலையிலும் அசிங்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது உத்தரபிரதேசத்தில்?

புகழ்பெற்ற ஓயோ (OYO) ஓட்டலானது, மற்ற ஓட்டலைவிட, குறைந்த வாடகையில் ரூம்கள் வழங்கப்படுகின்றன.. பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் அதிகமாக உள்ளதால், பல ஜோடிகள் இந்த ஓட்டலை தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஓயோ ஹோட்டல் ரூம்
அதைவிட முக்கியமாக, ரிஜிஸ்தர் செய்யப்பட்ட ஓட்டல்களில் போலீசார் வாரண்ட் இல்லாமல் சோதனை செய்ய முடியாது.. அப்படி செய்தால், அது மனித உரிமை மீறலாகவே கருதப்படும்... அதிலும் 18 வயதுக்கு மேல் ஆகியிருந்தால், கைது நடவடிக்கையும் கிடையாது.. இத்தனை சாதகமான விஷயங்கள் இருப்பதால்தான், ஒருசிலர் தங்களுக்கு சாதகமாக இவைகளை பயன்படுத்தி ஓயோவில் ரூம் போட்டு தங்குகிறார்கள்.
இவர்கள் தவறான முறைகளில் அறைகளை பயன்படுத்துவதாகவும், சமீபகாலமாகவே புகார்கள் கிளம்பின.. குறிப்பாக, திருமணமாகாத 18 வயதுக்கு உட்பட்டவர்கள், ஓயோ ரூம்களை தவறாக பயன்படுத்துவது கலாச்சார சீர்கேட்டை உண்டாக்கிவிடுவதாக விமர்சனங்கள் எழுந்தன..
புதிய விதிமுறைகள் - ஆவணங்கள்
இதையடுத்து, 6 மாதத்துக்கு முன்னர், ஓயோ தங்கும் அறைகளின் விதிகளில் மாற்றங்களும், புதிய விதிமுறைகளும் செய்யப்பட்டன.. அதில், கல்யாணமாகாத ஜோடிகளுக்கு ஓயோவில் அனுமதி கிடையாது, ஆன்லைனில் புக்கிங் செய்தாலும்கூட, ஓட்டலுக்கு வரும் தம்பதிகள், தங்களது உறவின் ஆதாரத்தை வழங்கினால்தான், அறை ஒதுக்கப்படும்..
ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்றவை மட்டுமே அடையாள சான்றிதழ்களாக ஏற்றுக்கொள்ளப்படும்... ஒருவேளை பான் அட்டையில் முகவரி இல்லாமல் இருந்தால், அதனை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.. எனவே, ஓயோ அறையில் தங்குவதற்காக வருபவர்கள், அடையாள அட்டையின் அசல் மட்டுமே கொண்டுவர வேண்டும்" என்பது உட்பட பல ரூல்கள் அமலாக்கப்பட்டன..
அரைகுறை டிரஸ்ஸுடன் தப்பி
இத்தனை விதிமுறைகளை புகுத்தியும்கூட, ஓயோ ரூம்களில் கொடூரங்களும் அக்கிரமங்களும் நடந்து வருகின்றன.. 2 மாதங்களுக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. பாக்பத் மாவட்டத்தில் பராத் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் ஓயோ ஓட்டலுக்கு திருமணமான பெண், கள்ளக்காதலனுடன் அறை எடுத்து தங்கியிருந்தார்..
இந்த தகவல் அப்பெண்ணின் கணவருக்கு தெரிந்துவிடவும், தன்னுடைய அம்மாவையும், போலீஸாரையும் அழைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட ஓட்டல் ரூமுக்கே சென்றார்.. உடனே அந்த பெண், துப்பட்டாவில் முகத்தை மூடிக்கொண்டு, ஹோட்டலின் பின்புற ஜன்னல் வழியாக வெளியேறி, 12 அடி உயரத்திலிருந்து கீழே எகிறி குதித்து தப்பி ஓடிய காட்சி இணையத்தில் வைரலானது.
கள்ளக்காதலனுக்கு பிறந்தநாள்
பிறகு கடந்த மாதமும்கூட, உத்தர பிரதேச மாநிலத்தில், மீரட்டில் உள்ள ஓயோ ஓட்டலில், கள்ளக்காதல் ஜோடி தங்கியிருக்கிறது..
அந்த திருமணமான பெண், தன்னுடைய கள்ளக்காதலனின் பிறந்தநாளை கேக் வெட்டி, கொண்டாடி, உல்லாசமாக இருந்துள்ளனர். திடீரென அப்பெண்ணின் கணவர், 2 குழந்தைகளுடன் வந்துவிட்டார்.. உடனே அந்த பெண், அரைகுறை டிரஸ்ஸுடனேயே ஓட்டல் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார்.. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.
ஐசிஐசிஐ வங்கி பெண்
இப்போது ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிகிறார் ஷீபா என்ற பெண்.. இவரும், தீபக் என்பவரும், கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.. திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தாலும், பல வருட காலமாகவே இவர்கள் ஓட்டல்களில் அறை எடுத்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள்.
கதவு திறக்கப்படவே இல்லை
அந்தவகையில், சமீபத்தில் ஓயோ ஹோட்டலிலும், ரூம் எடுத்து தங்கி மகிழ்ச்சியுடன் இருந்துள்ளனர்.. அன்றைய தினம், ரூம் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமலேயே இருந்தது.. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தந்து வரவழைத்தனர்..
போலீசார் அறைக்குள் சென்று பார்த்தபோது, ஷீபா மட்டும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்..அவரது கழுத்து நெரிக்கப்பட்டு கிடந்தது.. இதையடுத்து விசாரணையை போலீசார் துவக்கினார்கள்.. இது தொடர்பாக ஷீபாவின் அம்மா புகார் தந்து, தன்னுடைய மகளை கொன்றவர் மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்..
இதையடுத்து, தப்பியோடிய தீபக்கை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.. அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறியிருக்கிறார் தீபக்..
அதிர்ச்சி வாக்குமூலம்
அதாவது, ஷீபாவும், தீபக்கும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாம்.. இதனால், ஷீபாவை ஏற்றுக் கொள்ள தீபக் வீட்டில் சம்மதிக்கவில்லை.. இதனால் தீபக்கும் ஷீபாவை செய்ய தயங்கி வந்தததாக தெரிகிறது.. இதை ஏற்க முடியாத ஷீபா, தொடர்ந்து திருமணத்தை வற்புறுத்தி வந்தாராம். அப்படித்தான் சம்பவத்தன்றும் ஓயோ ரூமில் இருவருக்குள்ளும் தகராறு வெடித்துள்ளது..
இதில் ஆத்திரமடைந்த தீபக் ஷீபாவை கழுத்தை நெரித்து கொன்றதாக, போலீசாரிடம் வாக்குமூலமாக தந்துள்ளாராம்.. இப்போது தீபக் கைதாகி ஜெயிலில் உள்ளார்.... அதேபோல, பல விதிமுறைகளை கொண்டுவந்தும்கூட, ஓயோ ஓட்டல்களின் பெயர் மீண்டும் சலசலப்பில் சிக்கி உள்ளது..












Click it and Unblock the Notifications