கூட்டணிக்கு தேமுதிக வரலையா... டோன்ட் ஒர்ரி... ஹேப்பியான ஜெயக்குமார்
சென்னை:அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூர் பள்ளியில் காலை உணவு திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஜெயக்குமார் கூறியதாவது:
தனித்து போட்டி, பலம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார். அது அவங்க கட்சி... அப்படி பேசலாம்.

கூட்டணி கதவு
என்னை பொறுத்தவரையில் கூட்டணியின் கதவு திறந்திருக்கு. அதனால யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். அந்த வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கலாம்.

டோன்ட் ஒர்ரி
தேமுதிக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் கவலையில்லை. டோன்ட் ஒர்ரி.. அவ்வளவுதான்.

அதிமுக நிலைப்பாடு
7 பேர் விடுதலை தொடர்பாக சட்டசபையில் ஜெயலலிதா தலைமையில் என்ன நிலைப்பாடு எடுத்தாரோ, அதே நிலைப்பாட்டில் அதிமுக இருக்கிறது. விடுமுறையான ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அமைச்சரவை கூடி, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு இந்த விவகாரத்தை முக்கியமான ஒன்றாக பார்க்கிறோம்.

கட்டாயப்படுத்துதல்
அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறோம். ஆளுநரை அரசியல் அமைப்பு சட்டப்படி.. தமிழக அரசு கட்டாயப்படுத்த முடியாது.

தொடர்ந்து வலியுறுத்தல்
7 பேர் விடுதலை தொடர்பான மனுவை ஆளுநர் இதுவரை நிராகரிக்கவில்லை. தொடர்ந்து எங்களது கருத்தை வலியுறுத்தி கொண்டு தான் இருக்கிறோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications