திமுக ஆட்சிக்கு வந்தால் பல முதல்வர்கள் உருவெடுப்பார்கள்... சொல்கிறது அதிமுக
சென்னை: திமுக ஆட்சியை பிடித்தால் பல முதலமைச்சர்கள் இருப்பார்கள் என்று பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஸ்டாலின்,உதயநிதி, கனிமொழி,தயாநிதி மாறன் என்று பல முதல்வர்கள் உருவெடுப்பார்கள் என முதல்வர் ஈ.பி.எஸ் சாடினார். தனது பிரசாரத்தின்போது அவர் குற்றம் சாட்டுகையில், தி.மு.கவை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்களே குட்டி ராஜ்ஜியங்கள் நடத்தி வந்தனர். அமைச்சர்களை விட அதிகாரம் படைத்தர்களாக திமுகவின் மாவட்ட செயலாளர்கள் வலம் வந்தனர். இதை மிஞ்சிடும் வகையில் தற்போது திமுகவில் குட்டி ராஜாக்கள் வலம் வருகின்றனர். ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்களே இந்த குட்டி ராஜாக்களாக திமுகவை ஆக்கிரமித்துள்ளனர் என முதல்வர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ஒரு புறம் கருணாநிதியின் வாரிசுகள் திமுகவை ஆக்கிரமித்துள்ள நிலையில் மறுபுறம் திமுகவின் மூளையாக செயல்பட்ட முரசொலி மாறனின் வாரிசு தயாநிதி மாறன், கட்சி என்ற குடும்ப சொத்தில் எனக்கும் பங்கு உள்ளது என்று அவரும் ஒரு ராஜியத்தை உருவாக்கியுள்ளார்.
இப்படி ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்களே கட்சியை பிடிக்க திட்டமிட்டு வருகின்றனர். திமுக ஆட்சியை பிடித்தால் இந்த குட்டி ராஜாக்கள் குட்டி முதலமைச்சர்களாக வலம் வருவார்கள் என்பது நிதர்சனம். சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படும் நிலையில் ஸ்டாலினை வீட்டில் உட்கார வைத்துவிட்டு இந்த குட்டி ராஜாக்களில் ஒருவர் கட்சியை கைப்பற்றும் நிலை ஏற்படும் என்றும் அதிமுகவினர் கூறுகின்றனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications