மோடி, அமித் ஷா சாதாரண ஆட்கள் இல்லை.. எடப்பாடி மட்டும் அந்த கண்டிஷன் போட்டா.. அண்ணாமலைக்கு செக்தான்

மோடி, அமித் ஷாதான் அதிமுக - பாஜக கூட்டணி கணக்கு போடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து எடப்பாடி வெளியேற நினைப்பாரா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் கூட்டணியில் முடிவு எடுப்பதெல்லாம் டெல்லிதான் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்ததால் பாஜக கட்சியினர் கடும் அப்செட்டில் இருக்கின்றனர். அண்ணாமலை, அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் வெளிப்படையாக தங்கள் அதிருப்தியை அதிமுகவிற்கு எதிராக காட்டி உள்ளனர்.

இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சை மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி முடிவிற்கு வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு கட்சியின் கூட்டணியில் என்ன ஆகும் என்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். .

பேட்டி

பேட்டி

அவர் தனது பேட்டியில், 2024 வரை பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். அண்ணாமலையை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து எடப்பாடி வெளியேற நினைப்பாரா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் கூட்டணியில் முடிவு எடுப்பதெல்லாம் டெல்லிதான். டெல்லியில்தான் அந்த முடிவை எடுப்பார்கள். மோடி, அமித் ஷாதான் கூட்டணி கணக்கு போடுவார்கள். அதில் இவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை. அண்ணாமலை விவகாரத்தை காரணம் காட்டி கூட்டணியை உடைப்பார்களா என்பது சந்தேகம். ஏனென்றால் பாஜக இங்கே எப்படியாவது இடங்களை பெற வேண்டும் என்று பார்க்கிறது.

கூட்டணி

கூட்டணி

அதனால் கூட்டணியில் உடைப்பு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். கூட்டணி தொடருமா தொடராதா என்பது நமக்கு தெரியாது. எடப்பாடி ஒரு விஷயத்தை கையில் எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நான் கூட்டணிக்கு தயார்.. ஆனால் அண்ணாமலை தலைவராக இருக்க கூடாது. முன் 5 இடங்கள் கொடுத்தோம். 10 இடங்கள் கொடுக்கிறோம். செலவை பார்த்துக்கொள்கிறோம். அண்ணாமலையை நீக்குங்கள் என்று எடப்பாடி சொன்னால் பாஜக என்ன செய்யும். எடப்பாடி மட்டும் அப்படி சொன்னால் என்ன நடக்கும் என்று பாருங்கள். ஏனென்றால் அண்ணாமலையை வைத்துக்கொண்டு இவர்கள் கூட்டணி வைப்பது கடினம்.

அமர் பிரசாத் ரெட்டி

அமர் பிரசாத் ரெட்டி

அமர் பிரசாத் ரெட்டிக்கு சீட் கேட்பார் அண்ணாமலை. அப்படி கேட்டால் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்வார். நீங்களே சொல்லுங்கள். அரசியலில் எல்லாம் மாறும் என்று கூறுவார்கள். ஆனால் அமர் பிரசாத் பெரிய ஆள் இல்லை. அவரை வைத்துக்கொண்டு இருக்கும் பாஜகவை எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகம்தான். 2026ல் ஆட்சியை பிடிப்போம், 5வது கியரில் செல்வோம் என்றெல்லாம் அண்ணாமலை சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதெல்லாம் நடக்குமா? அதெல்லாம் யதார்த்தமா? சொல்லுங்கள். அவர்களுக்கு அந்த அளவிற்கு வாக்கு வங்கி இருக்கிறதா?

 என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

ஈரோடு கிழக்கில் பாஜகவை பிரச்சாரத்திற்கு கூட எடப்பாடி கூட்டு சேர்த்து செல்லவில்லை. அண்ணாமலை ஒருநாள்தான் பிரச்சாரம் செய்தார். அன்று கூட அண்ணாமலை - எடப்பாடி சந்திக்கவில்லை. இவர்கள் ஒன்றாக பிரச்சாரம் செய்யவில்லை. பாஜக பெரிய கட்சி என்றால் ஏன் ஈரோடு கிழக்கில் நிற்கவில்லை. ஈரோடு கிழக்கில் பாஜக மூலம் அதிமுகவிற்கு எத்தனை வாக்குகள் வந்தது? பாஜக காரணமாக அதிமுகவிற்கு எத்தனை வார்டுகளில் எத்தனை வாக்குகள் வந்தது பாஜக சொல்ல முடியுமா? பாஜக பெரிய கட்சி என்றால் அதை சொல்லட்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+