ஸ்டாலின், உதயநிதியை அமலாக்கத்துறை கைது செய்தால்! கனிமொழியை களமிறக்குவார்கள்! தாமோதரன் சொன்ன சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின், அமைச்சர்கள் யார் கைது செய்யப்பட்டாலும் அது லீகல் போராட்டத்திற்கு செல்லும். லீகல் போராட்டமாக பெரிய அளவில் வெடிக்கும். திமுக இதை பற்றி கவலைப்படுகிறதா என்று பலரும் கேட்கிறார்கள். திமுக அப்படி கவலைப்படவில்லை. அதை பற்றி எல்லாம் திமுக நினைக்கவே இல்லை, ஸ்டாலின், உதயநிதி ஜெயிலுக்கு போனால் கனிமொழியை களமிறக்குவார்கள், என்று ஒன்இந்தியாவிற்கு டாஸ்மாக் ரெய்டு தொடர்பாக பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். கடந்த இரண்டு நாட்களாக அங்கே ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

TASMAC

இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே டாஸ்மாக்கிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையான சோதனையை எதிர்ப்பது குற்ற நீதி பரிபாலனத்தின் அஸ்திவாரத்தை பாதிக்கும். சோதனைக்கு அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்று கொள்ள முடியாது. கூட்டாட்சி தத்துவம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்றும் கூட்டாட்சி தத்துவத்தை மக்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டுமே தவிர தேசத்திற்கு எதிரான குற்றம் குறித்த விசாரணையை தடுக்க பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதிகளும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பேட்டி

ஒன்இந்தியாவிற்கு டாஸ்மாக் ரெய்டு தொடர்பாக பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின், அமைச்சர்கள் யார் கைது செய்யப்பட்டாலும் அது லீகல் போராட்டத்திற்கு செல்லும். லீகல் போராட்டமாக பெரிய அளவில் வெடிக்கும். திமுக இதை பற்றி கவலைப்படுகிறதா என்று பலரும் கேட்கிறார்கள். திமுக அப்படி கவலைப்படவில்லை. அதை பற்றி எல்லாம் திமுக நினைக்கவே இல்லை.

திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான எல்லோரும் குறி வைக்கப்பட்டு உள்ளனர். முக்கியமான நபர்களை குறி வைத்து உதயநிதியை, ஸ்டாலினை குறி வைக்கின்றனர். 2011ல் இருந்து போடப்பட்ட 52 எப்ஐஆர்களை வைத்து இந்த விசாரணையை அமலாக்கத்துறை சோதனை செய்கின்றனர். பழைய எப்ஐஆர்.. அதிமுக காலத்தில் போடப்பட்ட எப்ஐஆர் அடிப்படையில் வழக்குகளை போடுகின்றனர்.

அதை வைத்தே விசாரணை செய்கின்றனர். இதில் தங்கமணி உள்ளிட்ட பழைய அதிமுக அமைச்சர்களும் சிக்கி உள்ளனர். ஏனென்றால் அவர்கள் ஆட்சி காலத்திலும் இதில் எப்ஐஆர் பதியப்பட்டது. தேர்தல் நேரத்தில் திமுகவை முடக்கலாம் என்று நினைக்கிறார்கள். பணத்தை பட்டுவாடா செய்ய முடியாது.. தடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். பாஜக கனவு இதில் பலிக்காது. எத்தனை பேரை பாஜகவால் கைது செய்ய முடியும்.

திமுக ஒன்றும் முனை மழுங்கிய இயக்கம் கிடையாது. மிசாவை பார்த்த கட்சி அது. எவ்வளவு அடித்தாலும் அது திமுகவிற்கு சாதகம்தான். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது போல செய்யலாம் என்று நினைக்கிறார்கள். யார் என்ன நினைத்தாலும் திமுகவின் தேர்தல் வெற்றியை தடுக்க முடியாது. ஸ்டாலின், உதயநிதி ஜெயிலுக்கு போனால் கனிமொழியை களமிறக்குவார்கள், , என்று ஒன்இந்தியாவிற்கு டாஸ்மாக் ரெய்டு தொடர்பாக பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+