ஆக்கிரமிப்புக்கு உதாரணமே கோவைதான்.. பெயரை சொன்னால் நாளையே அரசியலாகிவிடும்.. பிடிஆர் பேச்சு!
சென்னை: வனத்துறை ஆக்கிரமிப்பிற்கு உதாரணமே கோவைதான், அந்த உதாரணம் பற்றி பேசினால் நாளையே அது அரசியலாகிவிடும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று காலை அவை கூடியதில் இருந்தே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. காலையிலேயே அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறி சட்டசபைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள்.
தமிழ்நாடு அரசு தற்போது கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்றுதான் இந்த வழக்கில் தொடர்புடைய சயனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து இன்று சட்டசபை பரபரப்பாக காணப்பட்டது.

போராட்டம்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று கொடநாடு கொலை வழக்கு குறித்து பேசினார். சட்டப்படியே விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. நாங்கள் தேர்தலின் போதே இது தொடர்பாக வாக்குறுதி கொடுத்து இருந்தோம். அதைத்தான் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

உதயநிதி
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற வேண்டும் என்று பேசினார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சர் பட்ஜெட் உரை குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்தார். அதோடு தமிழ்நாட்டில் வனத்துறை ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்தும் பேசினார்.
Recommended Video

கோயம்புத்தூர்
பிடிஆர் தனது பேச்சில், தமிழ்நாட்டில் வனத்துறை ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. வனத்துறை கோயம்புத்தூரில் ஆக்கிரமிப்புக்கு மிகப்பெரிய உதாரணம் உள்ளது. அனைத்து மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு நடக்கிறது. என்றாலும் கோவைதான் ஆக்கிரமிப்பில் பெரிய உதாரணமாக நிற்கிறது. அந்த உதாரணம் பற்றி நான் பேசினால் அரசியல் ஆகிவிடும்.

அரசியல்
அந்த பெயரை சொன்னால் நாளையே அது பெரிய அரசியலாகிவிடும். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வனத்துறை நில ஆக்கிரமிப்பு நிலங்கள் வேகமாக மீட்கப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications