நான் பாமகவிலிருந்து வெளியேற தயார்- ஜி.கே.மணி! தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது என்ன?
சென்னை: ராமதாஸும் அன்புமணியும் மீண்டும் இணைந்தால் நான் பாமகவில் இருந்து வெளியேற தயார் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். மேலும் ஆடிட்டர் குருமூர்த்தியும் சைதை துரைசாமியும் சமரசம் செய்யவே தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜி.கே.மணி, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: ராமதாஸும் அன்புமணியும் மீண்டும் இணைந்தால் நான் கட்சியிலிருந்து வெளியேற தயாராக இருக்கிறேன். அன்புமணி யாரையெல்லாம் துரோகி என சொல்கிறாரோ அவர்களும் வெளியேறுவர்.

நானோ என் குடும்பத்தினரோ கட்சியில் இருக்க மாட்டோம். எம்எல்ஏ பதவியை கூட ராஜினாமா செய்து விடுகிறேன். வேறு கட்சியிலும் இணைய மாட்டோம், அவர்களாக அழைத்தால் பாமகவில் இணைகிறோம்.
ஆடிட்டர் குருமூர்த்தியும் சைதை துரைசாமியும் ராமதாஸ், அன்புமணியை சமாதானம் செய்யவே தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தனர். பாமக நிறுவனர் ராமதாஸை கொல்லுங்கள் என பதிவிட்டவரை அழைத்து அன்புமணி பாராட்டினார்.
ராமதாஸுடன் இருப்பவர்களை துரோகி என அன்புமணி அவமானப்படுத்துகிறார். கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியிருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கூட மிக கடுமையாக அன்புமணி விமர்சித்திருந்தார்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கெடுத்தது நான்தான் என அன்புமணி அவதூறாக பேசி வருகிறார். ஆட்சி மாற்றம் காரணமாக அந்த இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு நான் எப்படி காரணமாவேன்? என ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications