செந்தில் பாலாஜி அமைச்சராக ஆசைப்பட்டால்.. முறையாக மனு தாக்கல் செய்யலாம்.. உச்ச நீதிமன்றம் ட்விஸ்ட்
சென்னை: செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்கக்கூடாது என்று நாங்கள் (SC ) சொல்லவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இதனால் அவருக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால் அது தொடர்பாக மனுவை தாக்கல் செய்து இருக்கலாம். அவர் உரிய மனுவை SC யில் தாக்கல் செய்யலாம். அதன் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் அதில் அனுமதி பெற்று அவர் அமைச்சராகலாம். ஆனால் அதற்கு முன் அவர் விதிகளை மீறக்கூடாது.

ஜாமீன் விதிகளை மீறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக வழக்கு. தீர்ப்பில் உள்ள கடுமையான கருத்துகளை நீக்க கோரி செந்தில் பாலாஜி மனு அளித்து இருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
செந்தில் பாலாஜி - வழக்கில் நடந்தது என்ன?
லஞ்சம் மற்றும் பணமோசடி வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி அபய் எஸ் ஓகா தலைமையிலான அமர்வு அளித்த சில கருத்துகளை நீக்கக் கோரி முன்னாள் தமிழக அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, விண்ணப்பத்தின் நேரம் மற்றும் நோக்கத்தை ஆராய்ந்தது. "நீதிபதி ஓகா ஓய்வு பெற்ற பிறகு இந்த விண்ணப்பத்தை ஏன் தாக்கல் செய்ய வேண்டும்?" என்று நீதிபதி காந்த் விசாரித்து, பாலாஜியின் நடவடிக்கையின் நியாயத்தன்மையை கேள்விக்குள்ளாக்கினார்.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனு நல்ல நோக்கம் கொண்டது அல்ல என்றும், சட்ட செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாகவும் விவரித்தார்.
செந்தில் பாலாஜி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜாமீன் உத்தரவை கொடுக்கும் போது அமைச்சராக கூடாது என்று தடை எதுவும் இல்லை. வழக்கில் நேரடியாக உத்தரவில் அப்படி எதுவும் கூறப்படவில்லை. அமைச்சராவது எதிராக கோர்ட் தீர்ப்பில் எதுவும் இல்லை. செந்தில் பாலாஜி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார். அவர் விசாரணையை எதிர்க்கவில்லை. அப்படி இருக்க.. அவர் அமைச்சராவதை தடுக்க முடியாது.
செந்தில் பாலாஜி அமைச்சர்
இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எதிராக கடுமையான கருத்துக்களை கோர்ட் தெரிவித்து உள்ளது. ஆனால் வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை ஆகும் முன்.. நீங்கள் அமைச்சராக விரும்பினால் அதற்கான மனுவை தாக்கல் செய்யலாம். செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால் அது தொடர்பாக மனுவை தாக்கல் செய்து இருக்கலாம். அவர் உரிய மனுவை SC யில் தாக்கல் செய்யலாம், என்று நீதிபதி குறிப்பிட்டு உள்ளார்.
இந்த லஞ்ச பணமோசடி வழக்கை மொத்தமாக டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றலாமே.. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை ஏன் டெல்லிக்கு மாற்றக் கூடாது? என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதில் 2 வாரங்களில் பதில் அளிக்க கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications