வாரிசுகள் திறமைசாலியாக இருந்தால்.. ஸ்டாலின் கூறிய அந்த வார்த்தை! கவனிச்சீங்களா.. திரும்பும் பாஜக
சென்னை: திமுக வாரிசு அரசியல் செய்வதாக பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில் தான்‛‛வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம்'' என முதல்வர் ஸ்டாலின் பரபரப்பாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் திமுக வாரிசு அரசியலை பின்பற்றி வருகிறது என பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பல பாஜக தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு பதிலடியாக திமுகவினரும், பாஜக சார்பில் அரசியலில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை பட்டியலிட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் இன்று டிவிஎஸ் குழுமத்தின் டிஎஸ் சீனிவாசன் நூற்றாண்டு விழா நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இன்று இருசக்கர வாகனங்கள் எது வந்தாலும், ஏழை எளிய மக்களின் வாகனமாக திகழ்ந்தது டிவிஎஸ் தான்.
வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம். வாரிசு என்தும், ஏதோ அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம். டிவிஎஸ் போன்று பல நிறுவனங்கள் தமிழகத்துக்கு தேவை. தமிழக தொழில்துறையில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
'நம்ம ஊர் பள்ளி' என்கிற மகத்தான திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். சமூக சேவை எண்ணம் கொண்டவர்களுடைய முயற்சியையும் இணைத்துக் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலமாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். திட்டத்தை நான் தொடங்கிய முதல் நாளே ஐம்பது கோடி ரூபாய் மதிப்பிலும், இப்போது 158 கோடி ரூபாய் மதிப்பிலும் கொடைகள் வந்திருக்கிறது.

இன்றைக்கு தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் முன்னேறி வருகிறது. குறிப்பாக, தொழில் துறையில் அதிவேக முன்னேற்றம் அடைந்து வருகிறது. புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாக இருப்பதுதான் தொழில் நிறுவனங்கள் வருவதற்கு முக்கிய காரணமாகும். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஏறத்தாழ 10 விழுக்காடு அளவுக்குத் தமிழ்நாட்டின் பங்களிப்பு இருக்கிறது.
2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதுவரை எங்கும் இப்படி நடந்தது இல்லை என புகழும் அளவுக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளோம். தொழில் துறையை பொறுத்தவரை, அரசுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்பட்டு வளர்ச்சியை அடைய வேண்டும்'' என்றார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications