Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவங்க ஜெயிச்சா அவங்கதான் CM.. வேடசந்தூர் டூ ராமநாதபுரம்! இந்த 4 இடத்தை மட்டும் கவனிங்க! ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் என்பது எப்போதும் ஒரு கணிக்க முடியாத சஸ்பென்ஸ்தான்.. ஆனால் இந்த சஸ்பென்ஸிலும் சில சென்டிமென்ட் நகர்வுகள் காலங்காலமாக செயல்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.. அதாவது கோட்டையில் அமரப்போவது யார் என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்பே கட்டியம் கூறும் சில தொகுதிகள் தமிழகத்தில் எப்போதுமே உண்டு. அப்படி இந்த முறை 4 தொகுதிகளின் பெயர் அடிபடுகிறதாம்.. அதை பற்றிதான் சில செய்திகள் கசிந்துள்ளன.. அதை பற்றி பார்ப்போம்.

தமிழக அரசியலில் 1957-ம் ஆண்டு முதல் ஒரு விசித்திரமான, அதே சமயம் ஆச்சரியமான ஒற்றுமை நிலவி வருகிறது... அதாவது வேடசந்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 தொகுதிகளும் அரியணை ஏறப்போகும் கூட்டணி எது என்பதை முன்கூட்டியே சரியாக அடையாளம் காட்டி விடக்கூடியவை. இதே வரிசையில் 1977-ம் ஆண்டு முதல் சோழவந்தான் மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளும் இணைந்து கொண்டன.

Political Analysis

ஆச்சரியமான புள்ளிவிவரம்

இந்த தொகுதிகளின் வரலாறு என்பது ஒரு ஆச்சரியமான புள்ளிவிவரம்.... எந்தக் கூட்டணி இந்த 4 இடங்களில் வெற்றிக்கொடியை நாட்டுகிறதோ, அந்தக் கூட்டணியே தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலிலும் அமர்கிறது என்பதே கடந்த கால வரலாறு நமக்கு காட்டிய உண்மை..

இது ஒரு எதேச்சையான நிகழ்வு என்றெல்லாம் ஈஸியாக கடந்து சென்றுவிட முடியாது. மக்களின் மனநிலை மாநிலம் முழுவதும் எப்படி இருக்கிறது என்பதற்கான ஒரு முன்னோட்டமாகவே, இந்த தொகுதிகள் பார்க்கப்படுகின்றன. இது ஒரு வகையில் அரசியலின் "பிரிவியூ" என்றுகூட சொல்லலாம்.. எனவே நடக்க போகும் தேர்தல் இந்தத் தொகுதிகள் மீதான வெளிச்சத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

அதிமுக, திமுக செம போட்டி

குறிப்பாக, வேடசந்தூர் மற்றும் சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் முந்தைய தேர்தல்களில் களம் கண்ட அதே வேட்பாளர்களே மறுபடியும் மோதும் சூழல் நிலவுகிறது. இது ஒரு சாதாரணப் போட்டி என்பதைத் தாண்டி, ஒரு நேரடி மோதல் களமாகவே மாறியுள்ளது. அதனால்தான் திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 துருவங்களும் தங்களின் முழு பலத்தையும் இந்தப் பகுதிகளில் பிரயோகிக்க தயாராகி வருகின்றன.

அதேபோல, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளிலும் அதே பழைய முகங்களே மீண்டும் களமிறக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.. அதனால் அங்குள்ள வாக்காளர்களின் மனநிலை மீண்டும் பழைய பாதையிலேயே பயணிக்குமா அல்லது புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

பழையபடி நடக்குமா?

அதுமட்டுமல்ல, இங்கு வெற்றி பெறுவது என்பது வெறும் ஒரு எம்எல்ஏ சீட் பெறுவது அல்ல, மாறாக ஆட்சி அமைக்கப்போகிறோம் என்பதற்கான அத்தாட்சியைப் பெறுவது போன்றதாகும்.

அரசியல் நிபுணர்கள் சொல்வது போல, இது ஏதோ எதேச்சையாக நடந்த விஷயம் கிடையாது.. இந்த ஊர்களில் இருக்கும் ஜாதி, மதம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை அப்படியே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் ஒரு சிறு வடிவமாகத்தான் இருக்கிறது.. அதனால் தான் இங்கிருக்கும் நிலவரத்தை வைத்து ஊர் முழுக்க என்ன நடக்கும் என்று கணிக்கிறார்கள்..

அதற்காக "பழையபடி தான் இப்போதும் நடக்கும்" என்று அடித்துச் சொல்ல முடியாது.. இருந்தாலும், எல்லா அரசியல் கட்சிகளுமே இந்த 4 முக்கிய விஷயங்களை மனதில் வைத்து தான் இப்போது தங்கள் தேர்தல் வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள்..

15 தொகுதிகள் - சீக்ரெட் சிக்னல்

இந்த 4 தொகுதிகள் ஜஸ்ட் சாம்பிள்தான்.. இதே போன்ற தன்மையுடைய மேலும் 15 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாம். அவையும் மாநிலத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், இந்த 4 தொகுதிகள் சொல்லும் அந்த "சீக்ரெட் சிக்னல்" ரொம்பவே முக்கியமானது..

வேடசந்தூர், ஸ்ரீபெரும்புதூர், சோழவந்தான் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 இடங்களும், "யார் ஜெயிக்க வேண்டும்" என்பதை முடிவு செய்யும் தொகுதிகளாக மீண்டும் ஒருமுறை தங்களின் செல்வாக்கை நிரூபிக்குமா என்று ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறது.. இந்த தொகுதிகளில் எந்தக் கட்சி ஜெயிக்கிறதோ, அந்த கட்சிதான் கோட்டையைப் பிடிப்பதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறதாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+