சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசியலில் முட்டாள்களின் ஓட்டை வாங்குவது மிக முக்கியம்.. திமுக-திக வேறுபாடு கூறி கி வீரமணி சர்ச்சை

Google Oneindia Tamil News

சென்னை: திமுக மற்றும் திக இடையேயான வேறுபாடு என்ன? என்பது பற்றிய கேள்விக்கு விளக்கமளித்த கி வீரமணி,‛‛நாளை நாமே அரசியலுக்கு வந்தால் முட்டாள்களின் ஓட்டை வாங்குவது தான் மிக முக்கியம்'' என பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

திராவிடர் கழக தலைவராக இருப்பவர் கி வீரமணி. இவர் தந்தை பெரியார் மற்றும் திராவிடர் கழகத்தின் கொள்கையை மேடைக்கு மேடை பேசி வருகிறார். குறிப்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

மத்திய அரசின் மும்மொழி கொள்கை, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்று கி வீரமணி பேசி வருகிறார்.

பாஜகவை கழற்றிவிட்ட நிதிஷ் குமார்.. மனமார வாழ்த்தி சமூக நீதி சக்தியோடு இணைய கி வீரமணி அழைப்பு! பாஜகவை கழற்றிவிட்ட நிதிஷ் குமார்.. மனமார வாழ்த்தி சமூக நீதி சக்தியோடு இணைய கி வீரமணி அழைப்பு!

கி வீரமணியிடம் கேள்வி

கி வீரமணியிடம் கேள்வி

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், மேடையில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி இருக்கிறார். அப்போது ‛‛திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் இதில் முன்னேற்ற கழகத்தில் ‛ர்' இல்லை. இதற்கு என்ன வித்தியாசம்?'' என கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு கி வீரமணி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அவங்க அரசியலுக்கு போறவங்க

அவங்க அரசியலுக்கு போறவங்க

அதாவது என்ன வித்தியாசம் என்றால் பெயர் தான் வித்தியாசம். அவங்களை பொறுத்தமட்டில் அரசியல். அவர்கள் அரசியலுக்கு போறவர்கள். ‛ஒன்றே குலம் ஒருவனை தெய்வம்' என கூறுவார்கள். அரசியலுக்கு போய்விட்டால் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு ராகம் வாசிக்கணும். ஒரே ராகம் வாசிக்க வேண்டும் என்றால் திராவிடர் கழகம் தான். இதுதான் ரொம்ப மிக முக்கியம். நாம் மாற வேண்டிய அவசியம் இல்லை.

முட்டாளாக்கி ஓட்டு வாங்கணும்

முட்டாளாக்கி ஓட்டு வாங்கணும்

ஓட்டுக்காக ‛நாமம்' போட்டவர் கேட்டால் வைஷ்ணவ பெருமையை அரசியல்வாதி பேசுவான். விபூதி போட்டவரிடம் சைவ பெருமை பேசுவான். நம்ம ஆள் வந்தால் பகுத்தறிவுவாதி என்பான். அங்கே போனால் சாய்புனா அவரு அவரு.. என நாமே நாளைக்கு அரசியல்வாதி ஆனாலோ, அரசியல் கட்சியானால் நம்ம கதி அப்படித்தான் ஆகும். ஏனென்றால் முட்டாள்கள் ஓட்டு வாங்கணும் என்பது தான் மிக முக்கியம். ஒன்று காசு கொடுத்து வாங்கு, இல்லாவிட்டால் ஏமாற்றி வாங்கு. யார் அதிகம் ஏமாற்றுகிறார்கள் என்பது தான் போட்டி. வேறு ஒன்றுமே இல்லையே'' என்றார்.

விமர்சனம்

விமர்சனம்

அதோடு, திமுக என்பது அரசியலில் உள்ளது. நம்மை தாய் கழகம் எனக்கூறி கொள்ளும் கட்சியாக உள்ளது. திராவிடர் கொள்கையை ஏற்று கொண்டுள்ளது. இதனால் திகவுக்கும், திமுகவுக்கும் இடையே அதிக வேறுபாடு கிடையாது எனும் வகையில் பொருள்படும்படி பேசினார். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு கலவையான விமர்சனங்களை நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

English summary
What is the difference between DMK and DK? Ki Veeramani, who explained the question, said, If we enter politics tomorrow, the most important thing is to buy the fool's hole'' has stirred up controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X