நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்?
சென்னை: தமிழக அரசியலில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறினாலும் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் மட்டும் அசைக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. "நாங்க வந்தா நிப்பாட்டிடுவோம்" என்று சொல்லும் துணிச்சல் எந்தக் கட்சிக்கும் இப்போது இல்லை.
திமுக கொண்டு வந்த இந்தத் திட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் சரி, அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள தமிழக வெற்றிக் கழகமும் (TVK) சரி, தங்களின் ஆதரவை மறைமுகமாகவும் நேரடியாகவும் தெரிவித்துவிட்டன. அதனால், கோட்டையில் யார் அமர்ந்தாலும் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் அந்த 1,000 முதல் 25000 ரூபாய் வரை நிச்சயம் என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால், அரசு தரப்பில் ஒரு சின்ன 'செக்' வைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் கையில் இருக்கும் 'ரேஷன் கார்டு' மட்டும் சரியாக இல்லை என்றால், உரிமைத் தொகைக்கு 'டாட்டா' காட்டிவிடுவார்கள்.
ரேஷன் கார்டு... இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
மகளிர் உரிமைத் தொகைக்கு அஸ்திவாரமே ரேஷன் கார்டு தான். அது ஆக்டிவாக (Active) இருந்தால் மட்டுமே நீங்கள் பயனாளியாகத் தொடர முடியும். ஒருவேளை உங்கள் கார்டு ரத்து செய்யப்பட்டாலோ அல்லது முடக்கப்பட்டாலோ (Suspended), உரிமைத் தொகை மட்டுமல்ல, அரசின் எந்தவொரு நலத்திட்டமும் உங்களை வந்து சேராது.
ஏன் கார்டு முடக்கப்படுகிறது?
ரேஷன் கார்டு முடக்கப்படுவதற்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணம் - 'சோம்பேறித்தனம்'. ஆம், பலரும் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து வருகிறார்கள்.
தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கவில்லை என்றால், உங்கள் கார்டு தானாகவே முடக்கப்படும்.
அரசு கணக்கின்படி, "பொருட்களே வாங்கவில்லை என்றால் இவர்களுக்கு ரேஷன் கார்டு தேவையில்லை போலிருக்கிறது" என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்துவிடுவார்கள்.
ரேஷன் கார்டு முடக்கம்
அப்படி முடக்கப்பட்ட கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்வது அத்தனை எளிதல்ல. நீங்களே நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து, "ஏன் மூன்று மாதம் கடைக்கு வரவில்லை?" என்பதற்கு முறையான விளக்கம் அளித்தால் மட்டுமே கார்டு மீண்டும் உயிர் பெறும்.
எனவே மகளிரே, உரிமைத் தொகை உங்கள் அக்கவுண்டிற்கு தங்கு தடையின்றி வர வேண்டும் என்றால், மாதாமாதம் ரேஷன் கடைக்கு ஒரு 'விசிட்' அடித்து பொருட்களை வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும், ஜாக்கிரதை!
ரேஷன் கார்டு தொடர்பான திருத்தங்களைச் செய்வது இப்போது முன்பை விட எளிதாகிவிட்டது. நீங்கள் இ-சேவை மையங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை, உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே TNPDS இணையதளம் அல்லது செயலியில் கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்யலாம்:
1. புதிய உறுப்பினர் பெயர் சேர்த்தல் (Add Member)
திருமணம் ஆன பிறகு மனைவியின் பெயரைச் சேர்க்க அல்லது குழந்தைகளின் பெயரைச் சேர்க்க:
குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate) போதுமானது.
திருமணம் ஆனவர்களுக்கு, பழைய கார்டில் இருந்து பெயர் நீக்கப்பட்ட சான்றிதழ் (Removal Certificate) மற்றும் திருமண அழைப்பிதழ் அல்லது சான்றிதழ் அவசியம்.
2. முகவரி மாற்றம் (Address Change)
வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறினாலோ அல்லது வேறு பகுதிக்குக் குடிபெயர்ந்தாலோ:
புதிய வீட்டின் மின்சார ரசீது (EB Bill), எரிவாயு உருளை ரசீது (Gas Bill) அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் (Rental Agreement) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாகப் பதிவேற்ற வேண்டும்.
3. குடும்பத் தலைவர் மாற்றம் (Change of Family Head)
குடும்பத் தலைவர் இறந்துவிட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காக மாற்ற நினைத்தாலோ:
இறப்புச் சான்றிதழ் அல்லது உரிய காரணத்தை விளக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் போது, குடும்பத் தலைவராக ஒரு பெண் இருப்பது அவசியம் என்பதால் பலரும் இந்த மாற்றத்தைச் செய்கிறார்கள்.
4. உறுப்பினர் பெயர் நீக்கம் (Remove Member)
திருமணம் ஆகிச் சென்றவர்கள் அல்லது உயிரிழந்தவர்களின் பெயரை நீக்க:
திருமண அழைப்பிதழ் அல்லது இறப்புச் சான்றிதழைப் பதிவேற்றி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். 2-3 வாரங்களில் அனுமதி கிடைத்துவிடும்.












Click it and Unblock the Notifications