வெறும் 10 நாள் தள்ளி தங்கம் வாங்கியிருந்தால் 40000 லாபம்.. நகை பிரியர்களுக்கு இன்று தான் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஏப்ரல் 22ம் தேதி 10 பவுன் தங்கம் வாங்கியவர்கள் வெறும் 10 நாள் தள்ளி இன்று வாங்கியிருந்தால் குறைந்தது 40000 முதல் 45000 வரை லாபம் கிடைத்திருக்கும். ஏன் அட்சய திருதியை நாளில் பலர் நேற்று ஆர்வமுடன் தங்கம் வாங்கியிருந்தார்கள். அவர்கள் ஒரு வேளை இன்று தங்கம் வாங்கியிருந்தால் சவரனுக்கு குறைந்தது 1640 முதல் 2000 ரூபாய் லாபம் கிடைத்திருக்கும். ஏனெனில் செய்கூலி சேதாரம், ஜிஎஸ்டியை கணக்கிட்டால் நிச்சயம் இன்று தங்கம் வாங்கியவர்களுக்கு ஓரளவு லாபம் தான்.

'அட்சய திருதியை' தினமான நேற்று சென்னையில் உள்ள தங்க நகைக் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகள் அதிகாலை தொடங்கி முதல் நள்ளிரவு வரை திறந்து இருந்தன. பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு இருந்ததால் நகை வாங்க பல கடைகளில் வாடிக்கையாளர்கள் வந்தார்கள். நேற்று காலையில் வந்தவர்களை விட மாலையில்தான் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்தார்கள்.

If you had bought gold just 10 days later you would have made a profit of 40 000

அட்சய திருதியை தினமான நேற்று சென்னையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,980-க்கும், பவுன் ரூ.71,840-க்கும் விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கும், விற்பனையானது. ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனையாகியது. கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 770-க்கும், ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆகிறது. சென்ற ஆண்டு அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கியிருந்தால் ஒரு பவுனுக்கு 18000 ரூபாயும், 10 பவுன் நகைக்கு ஒரு லட்சத்து 80000 ரூபாயும் லாபமாக கிடைத்திருக்கும்.

அதேநேரம் கடந்த 10 நாளில் ஒப்பிடும் போது நேற்று ஓரளவு தங்கம் விலை குறைந்தே இருந்தது. ஆனால் நேற்றைவிட இன்று தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி 10 பவுன் தங்கம் வாங்கியவர்கள் வெறும் 10 நாள் தள்ளி இன்று வாங்கியிருந்தால் குறைந்தது 40000 முதல் 45000 வரை லாபம் கிடைத்திருக்கும். ஏனெனில் ஏப்ரல் 22ம் தேதி அன்று தங்கம் விலை ஒரு கிராம் 9290 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் தங்கம் 74320 ரூபாய் ஆகவும் இருந்தது. ஆனால் மே 1ம் தேதியான இன்று ஒரு கிராம் 8,775 ரூபாய்ஆகவும், ஒரு சவரன் தங்கம் 70,200 ஆகவும் இருந்தது. அட்ச திருதியை நாளான நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று தங்கம் விலை 1640 ரூபாய் சவரனுக்கு குறைந்துள்ளது.

எனவே ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரமும் கணிசமாக குறையும் என்பதால் இன்று நகை வாங்கியவர்களுக்கு ஓரளவு லாபமாக இருந்திருக்கும். அதேநேரம் கடந்த ஜூலை மாதம் நிர்மலா சீதாராமன் நகைக்கான இறக்குமதி வரியை குறைத்த போது ஒரு சவரன் 51000 என்கிற அளவில் குறைந்திருந்தது. அதை ஒப்பிட்டு பார்த்தால் நிச்சயம் 10 பவுன் நகைக்கு 2 லட்சம் வரை லாபம் கிடைத்திருக்கும்.

வெறும் ஒரு ஆண்டில் லட்சம் லாபம் எதிலும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் போல் லாபம் வேறு முதலீட்டில் கிடைத்திருக்குமா என்றாலும் கேள்விக்குறி தான். ரியல் எஸ்டேட்டுக்கு அடுத்தபடியாக தங்கம் அதிகமானோருக்கு லாபம் தரும் முதலீடாக தொடர்கிறது.இதனிடையே அட்சய திருதியை நாளான நேற்று, கடந்த ஆண்டை போன்று ரூ.14 ஆயிரம் கோடி அளவில் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+