நீங்கள் 23 ஜூலை, 2024 க்கு முன்னர் வீடு/நிலமோ விற்றிருந்தால் நற்செய்தி.. மத்திய அரசு தரும் இரண்டு லாபம்
சென்னை: நடுத்தர வர்க்கத்தினர் கனவில் கூட நினைக்காத ஒரு விஷயம் மத்திய பட்ஜெட்டில் நடந்தது. சொத்துக்களுக்குகான indexation இல்லாமல் 12.5% வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக வீடு விற்போர் பெரிய அளவில் வரிகட்ட வேண்டிய கட்டாயம் உருவானது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மத்திய அரசு இரண்டு ஆப்சன்களை கொடுத்துள்ளது. இதனால் யாருக்கு பலன்.. யாருக்கு பொருந்தும் என்பதை பார்ப்போம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் சொத்துகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான (LTCG) வரியை 12.5% ஆகக் குறைத்தார். இதன் மூலம் நியாயமாக பார்த்தால் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய பயனாக மாறியிருக்க வேண்டும். ஆனால் அதேநேரம் மிகவும் புத்திசாலித்தனமாக நீண்ட கால மூலதன ஆதாய வரியை கணக்கிடுவதில் உள்ள குறியீட்டை நிதியமைச்சர் நிர்மலா நீக்கினார். இதன் காரணமாக சொத்துக்களை விற்றால் அதிக வரியை கட்ட வேண்டிய கட்டாயத்திற்கு நடுத்தர வர்க்கத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்..

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல் (indexation) வரி விதிப்பை அறிமுகப்படுத்தி உள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. குறிப்பாக காங்கிரஸ் இந்த விவகாரத்தில் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெளிவாக விளக்கியது.
காங்கிரஸ் வெளியிட்ட விளக்கத்தின் படி, "நீங்கள் ஜனவரி 2009 இல் ₹50 லட்சத்திற்கு ஒரு அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று ₹1.5 கோடிக்கு விற்றுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். குறியீட்டு முறையின்படி, 15 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் செலுத்திய ₹50 லட்சம் இன்றைக்கு ₹1.32 கோடியாகக் கருதப்படுகிறது. எனவே, நிகர லாபம் அல்லது மூலதன ஆதாயம் ₹17.5 லட்சம் மட்டுமே. மேலும் 20% என்ற விகிதத்தில் மூலதன ஆதாய வரியாக ₹3.5 லட்சம் மட்டுமே செலுத்த வேண்டும். உங்களுக்கு 14 லட்சம் லாபம் கிடைக்கும்.
ஆனால் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி குறியீட்டு முறை (indexation) இல்லாமல் இப்போது உங்கள் மூலதன ஆதாயம் ₹1 கோடியாகும், மேலும் 12.5% இல், நீங்கள் வரியாக ₹12.5 லட்சம் செலுத்துவீர்கள். முக்கியமாக, அரசு பழைய முறையை விட புதிய முறையில் ₹9 லட்சம் அதிகமாக வாங்கும். ஒரு சொத்தை வாங்கி 15 வருடங்கள் வைத்திருந்த பிறகு உங்கள் நிகர லாபம் வெறும் ₹5,01,825 மட்டுமே கிடைக்கும். அதாவது கடந்த முறையைவிட உங்களுக்கு கிட்டத்தட்ட 9 லட்சம் இழப்பு ஏற்படும்.
அதேபோல் இன்னாரு உதாரணத்தை பார்ப்போம் நீங்கள் ஜனவரி மாதம் 2018 இல் ₹80 லட்சத்திற்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தனிப்பட்ட அவசரத்தின் காரணமாக இன்று ₹95 லட்சத்துக்கு விற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.இப்போது நிலைமை கடினமாகிறது. குறியீட்டு முறை காரணமாக , நீங்கள் உண்மையில் ₹11.76 லட்சம் நஷ்டம் அடைவீர்கள். அத்துடன் LTCG வரி என்பது பூஜியம் என்றே செலுத்தியிருப்பீர்கள்.
ஆனால் புதிய முறையில், உங்கள் காயத்தை மேலும் அதிகப்படுத்தி விடும். உங்களிடமிருந்து ₹1.87 லட்சத்தை எல்டிசிஜியாக எடுத்துக் கொள்வார். இதனால் உங்களுக்கு நிகர இழப்பு ₹13.63 லட்சமாகிவிடும்.. மீண்டும் நீங்கள் கடன் வட்டிக்கு மட்டும் பல லட்சங்கள் அதிகமாக செலவழிக்க வேண்டியது வரும்.
நீண்ட கால மூலதன ஆதாய வரிமுறையில் குறியீட்டை அகற்றுவது அதன் முழு நோக்கத்தையும் வீணாக்கிவிடுகிறது. இது அனைவரையும் பாதிக்கிறது மற்றும் அதிகமான மக்கள் தங்கள் பரிவர்த்தனைகளை குறைத்து மதிப்பிடுவதற்குத் தள்ளிவிடும். கறுப்புப் பணத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும். இந்த முறை இது ரியல் எஸ்டேட் முதலீடுகளை கடுமையாக பாதிக்கும். நமது கட்டுமானத் துறையை இன்னும் பெரிய நெருக்கடிக்குள் தள்ளக்கூடும்" என்று கூறியிருந்தது.
காங்கிரஸ் இந்த விவகாரத்தை கையில் எடுத்து விளக்கம் அளித்த பின்னர், பலரும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து மத்திய அரசை கேள்வி கேட்க தொடங்கினார்கள். நடுத்தர வர்க்கத்தினர், இனி சொத்து விற்றால், அரசுக்கு வரியாக மட்டும் பல லட்சத்தை கட்ட வேண்டியதிருக்கும் என்பதால், எதிர்ப்புகள் அதிகமானது. பலரும் மத்திய அரசு உடனே தங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, இரண்டு ஆப்சன்களுடன் புதிய மசோதாவை இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. அதுவும் எப்படி என்றால், வருமான வரிமுறையில் எப்படி பழைய முறை, புதிய முறை என இரண்டு முறைகள் உள்ளதோ, அதே பாணியில் இரண்டு முறைகளை புகுத்தும் மத்திய அரசு , எது உங்களுக்கு லாபமோ, அதனை தேர்வு செய்யுங்கள் என்று அறிவிக்க போகிறதாம். ஆனால் எல்லாமே ஜூலை 2023க்கு முன்னர் வீடு, நிலம் விற்றிருந்தால் இந்த விதிமுறைகள் பொறுந்தும். மற்றவர்களுக்கு புதிய முறையில் தான் வரியை கட்ட வேண்டியதிருக்கும்.
மத்திய அரசு நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தொடரில், இதற்காக நிதி மசோதாவில் ஒரு மாற்றம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நீங்கள் 23 ஜூலை, 2024 க்கு முன்னர் வீடு/நிலமோ விற்றிருந்தால், உங்களுக்கு இது நிச்சயம் நல்ல செய்தியாக இருக்கும். அதாவது, நீங்கள் 23 ஜூலை, 2024 க்கு முன்னர் வீடு/நிலமோ விற்றிருந்தால், LTCG கணக்கிடும்போது, உங்களுக்கு ஆப்சன் வழங்கப்படும்.
புதிய விதிப்படி, indexation இல்லாமல் 12.5% வரி இருக்கும். இல்லை பழைய விதிப்படியே எனக்கு வரியை கணக்கிடுங்கள் இல்லாமல் indexation கணக்கிட்டு, வரும் வருவாயில், 20% வரியை கட்ட வேண்டும். மேற்கண்ட இரண்டில், உங்களுக்கு எதுஅட்வான்டேஜ் ஆக இருக்குமோ, அதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த மாறுதல், 23 ஜூலை, 2024 க்கு முன்னர் வாங்கி விற்ற அசையாச் சொத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த தகவலை பொருளாதார நிபுணர் ராஜேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications