இந்தியாவில் தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால் பெயரும் வரும்.. குட்நியூஸ்
சென்னை: இந்தியாவில் சுமார் 120 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள். இதில் 95 கோடி பேர் ஸ்மார்ட் போன் வைத்துள்ளார்கள். ஆனால் இன்றைக்கு செல்போனில் மோசடி மற்றும் வணிக நோக்கில் தவறான அழைப்புகள் அதிகமாக வருகிறது. இதனால் ஏற்படும் மோசடியை தடுக்க நடவடிக்கையாக தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால் பெயரும் பதிவாகும் வகையில் புதிய வசதியை தொலை தொடர்பு அமைச்சகம் கொண்டுவரப்போகிறது.
இந்தியாவில் செல்போன் எண் இல்லாமல் வங்கி கணக்கை ஓபன் செய்ய முடியாத நிலை இருக்கிறது. நகைக்கடன் பெறவும் ஓடிபி அவசியம் என்கிற அளவிற்கு மாறிவிட்டது. செல்போன் இல்லாவிட்டால் ரேஷன் கார்டு வாங்க முடியாது. ஆதார் வாங்க முடியாது. அரசின் உதவி தொகைகள் எதுவும் வாங்க முடியாது. அரசின் சேவைகளை பெறவும் முடியாது. வீட்டில் குறைந்த பட்சம் ஒருவருக்காவது செல்போன் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அரசின் சேவைகள் மற்றும் கட்டாயம் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் கூட கிடைக்கும். அந்த அளவிற்கு செல்போன் அவசியமாகி விட்டது.

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு
இதன் காரணமாக இந்தியாவில் 120 கோடிக்கும் அதிகமானோர் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் சுமார் 95 கோடி பேர் தங்களது ஸ்மார்ட் போன்களில் இணையதளத்தை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஆனால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களை குறிவைத்து மோசடி கும்பல் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
மோசடி நடக்கிறது
இதனால் மோசடி வலையில் சிக்கி பலர் பணத்தை பறிகொடுக்கிறார்கள். முன்பு ஆதார் கார்டு மற்றும் ஓடிபி கேட்டு மோசடி செய்தார்கள். அடுத்தாக மின்சார பில் பெயரில் மோசடி செய்தார்கள். அதற்கு அடுத்து கேஒய்சி பதிவு செய்ய வேண்டும் என்று கூறி ஏமாற்றி பணத்தை பறித்தார்கள். பார்ட் டைம் வேலை, அரசு வேலை, கவர்ச்சிகமாரன தள்ளுபடிகள் என பல்வேறு லிங்குகுளை அனுப்பி மோசடி செய்தார்கள். எல்லாவற்றையும் கண்டுபிடித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. லேட்டஸ்டாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் மோசடி செய்கிறார்கள். அதேபோல் கூகுள் பேவில் தவறாக பணம் அனுப்பியதாக கூறி மோசடி செய்கிறார்கள்.
ட்ரூ காலர் ஆப்
மோசடிகள் ஒருபுறம் எனில் , செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு, தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்தும், தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்தும் அவ்வப்போது அழைப்புகள் வந்து வீண் தொல்லை நடக்கிறது. கடன் வாங்குங்கள், கார் வாங்குங்கள், இணையதள இணைப்பு பெறுங்கள், நன்கொடை தாருங்கள், கிரெடிட் கார்டு வாங்குகள் என பல அழைப்புகள் வருகின்றன. ஆனால் யார் அழைக்கிறார்கள் என்பதை அறிய முடியாத நிலை இருப்பதால் பலர் ட்ரூ காலர் போன்ற ஆப்களை பயன்படுத்துகிறார்கள்.
சிம் கார்டு யாருடையது என பெயரும் வரும்
இந்த சூழலில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் காண புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளன. அதன்படி, செல்போனில் சேமித்து வைக்காத எண்களில் இருந்து அழைப்பு வரும்போது, அழைப்பு வரும் எண்களுடன் சேர்த்து அந்த சிம் கார்டை பயன்படுத்துபவரின் பெயர் விவரமும் பதிவாக போகிறது.
கடிவாளம் வருகிறது
இந்த வசதி '4ஜி' அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மோசடி மற்றும் சிரமத்தை கொடுக்கும் விரும்பாத அழைப்புகளுக்கு செல்போன் எண்ணோடு பெயரும் வரும் வகையிலான இந்த சேவை கடிவாளம் போடும் வகையில் இந்த முடிவினை டிராய் எடுத்துள்ளதாம்.
6 மாதத்தில் வரலாம்
எனவே தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை இனி அடையாளம் கண்டு அச்சமின்றி எடுத்து பேச முடியும். தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த வசதியை அறிமுகப்படுத்த பேசி வருகின்றன. விரைவில் 2 அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்க தீவிரம் காட்டி வருகின்றன. அரசு இதற்கான அறிவிப்பானையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டியது கட்டாயம் ஆகும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications