ஏன் பாஜக உடன் சண்டையை மூட்டி விடுறீங்க.. திடீரென செல்போனை எடுத்த ஓபிஎஸ்.. திகைத்த செய்தியாளர்கள்
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு உங்களை கூப்பிடவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா என்று செய்தியாளர் இன்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், ஏங்க நான் அவர்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று சொல்கிறேன், ஆனால் அதற்கு பிறகும் கூப்பிட்டாங்களா இல்லையா என்று ஏன் சண்டையை மூட்டி விடுறீங்க என்று கேட்டார்.
பாஜக உடன் 2024ல் மட்டுமல்ல, 2026 தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.இந்த சூழலில் ஓ பன்னீர்செல்வம் அணியினர் தங்கள் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு ஒ பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்பட ஓபிஎஸ் அணியினர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது, பாஜக உடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக சொல்றீங்க.. அவங்க என்ன சொல்றாங்க.. உங்களை எதற்காக அணுகுகிறார்கள் என்று சொல்ல முடியுமா என்று செய்தியாளர் ஒருவர் ஓ பன்னீர்செல்வத்திடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வோம். பேச்சுவார்த்தை நடத்திய அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிப்போம் என்றார்.
அப்போது செய்தியாளர், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு உங்களை கூப்பிடவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், ஏங்க நான் அவர்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று சொல்கிறேன், ஆனால் அதற்கு பிறகும் கூப்பிட்டாங்களா இல்லையா என்று ஏன் சண்டையை மூட்டி விடுறீங்க என்று கேட்டார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் கூட்டணி இல்லாமல் உங்களால் தனித்து செயல்பட முடியுமா என்று கேட்டார். அப்போது பேசிய ஓபிஎஸ் எங்களால் கூட்டணி இல்லாமல் உறுதியாக செயல்படவும் முடியும் என்றார்.
அப்போது செய்தியாளர், நீங்கள் 2019ல் என்டிஏ கூட்டணியில் இருந்தீர்கள்.. 2021 சட்டமன்ற தேர்தலிலும் என்ஏடி கூட்டணியில் இருந்தீர்கள்..இப்போது என்டிஏ கூட்டணியில் இருக்கீங்களா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த ஓபிஎஸ், ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன் என்றார். அப்போது குறுக்கிட்ட வைத்திலிங்கம், ஏற்கனவே தொடர்பில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. அரசியல் நிலைமை இன்று ஒன்று இருக்கும்.. நாளை ஒன்று நடக்கும்.. தேர்தல் வரட்டும் பார்க்கலாம்.. ஓபிஎஸ் ஏற்கனவே இதுபற்றி சொல்லியிருக்கிறார்.. என்றார். அப்போது ஓபிஎஸ் செல்போனை எடுத்த ஓபிஎஸ் இன்றைய தேதி வரையில் இருக்கிறது. நாளைக்கு உங்களிடம் பேசும் போது, தேதி வரையிலும் காண்பிப்போம்.
காஞ்சிபுரத்தில் புரட்சி பயணத்தை தொடங்குவதாக இருந்ததது. சந்தர்ப்ப சூழ்நிலையால் தள்ளிப்போனது.. அதுபற்றி கூட்டத்தில் பேசி இருக்கிறோம். எந்த மாவட்டத்தில் நடத்துவது என்று முடிவு செய்து வைத்திருக்கிறோம்.. தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதிமுக எத்தனையாக பிரிந்து இருந்தாலும், அவர்களின் வாக்குகள் சிதறாது.. எங்களுக்குத்தான் விழும் என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் ஒருங்கிணைந்த அதிமுக சாத்தியம் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், நாங்கள் முதலில் இருந்தே அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.. சேர்ந்தால் தான் ஜெயிக்க முடியும் என்று நாங்கள் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.. அதை பழனிசாமியிடம் போய் கேளுங்க.. அவரு முடியாது முடியாது என்று சொல்லியதால் இதோடு 10 தோல்வியாகிவிட்டது என்றார்.
அப்போது குறுக்கிட்ட வைத்திலிங்கம்..எங்களுடைய கணிப்பு எடப்பாடியை தவிர்த்து அண்ணா திமுக ஒன்றிணையும். அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஒன்றிணையும்.. கூடிய சீக்கிரத்தில் நடக்கும்.. இது எங்களுடைய கணிப்பு என்றார்.இதனிடையே சசிகலாவை சந்திப்பது எப்போது என்ற கேள்விக்கு, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இப்போதுதான் அவர் மீண்டு வந்துள்ளார். பொறுமையாக இருங்கள் விரைவில் நடக்கும் என்றார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு, அதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications