இளையராஜா உருக்கமாக கேட்ட ஒற்றை கேள்வி..உருகி உருகி பதில் செல்லும் நெட்டிசன்கள்..பாருங்க
சென்னை: இசைஞானி இளையராஜா, தற்போது பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவர் பாடிய பல்வேறு படங்களின் பாடல்களை தற்போது அவரது குரலில் நேரில் கேட்க வேண்டும் என்று பல இசைப்பிரியர்கள் விரும்புகிறார்கள். அந்த வகையில் தன்னுடைய ஒவ்வொரு இசை நிகழ்ச்சியிலும், இந்த ஒரு பாடலையாவது நான் பாட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அது என்ன பாடலாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்? என்று இளையராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்றைக்கு இரவு நேரங்களில் இளையராஜாவின் பாடல்களை கேட்டுத்தான் பலர் தூங்குகிறார்கள். வாகனத்தில் தொலைதூர பயணம் செய்வோரும் இளையராஜா பாடல்களையே விரும்பி கேட்கிறார்கள். இளையராஜா பாடல்கள் இல்லாமல் எந்த மினி பேருந்துகளும், எந்த தொலைதூர அரசு பேருந்துகளும் இருக்காது. இசையால் பலரது நெஞ்சங்களில் நிறைந்துள்ளார் இளையராஜா.

வெறும் ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் பிடித்தனமான பாடல்களை இளையராஜா போடவில்லை.. 80வயதாக இருந்தாலும்.. எட்டு வயதுதான் ஆகியிருந்தாலும், இளையராஜா பாடல்கள் பலருக்கும் பிடிக்கும். இன்றைய 2கே கிட்சுகளுக்கும், முந்தைய 90ஸ் கிட்ஸ்களுக்கும், 80ஸ் கிட்ஸ், 70ஸ் கிட்ஸ்களுக்கும் பிடித்த இசையமைப்பாளராக இளையராஜா இருக்கிறார். அவரது இசையில் வந்த பாடல்கள் எப்படி இந்த அளவிற்கு அசாத்தியமாக பாடப்பட்டது என்று கேள்வி எழுப்பாதவர்களே இல்லை..
கிராமிய இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை என உலகின் பல்வேறு இசை வடிவங்களில் இளையராஜா இசையமத்துள்ளார். அவர் எல்லா இசையிலும் மேதையாக இருக்கிறார். அண்மையில் லண்டனில் நடைபெற்ற 'சிம்பொனி' நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமிதம் சேர்த்தார். தற்போது படங்களுக்கு இசையமைப்தைவிட, பல்வேறு நகரங்களில் இசை கச்சேரி அமைப்பதில் இளையராஜா அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இறுதியாக கோவையில் கடந்த இரண்டு வாரம் முன்பு இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாகதிருநெல்வேலி, கரூர் என பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் இளையராஜா.இந்நிலையில் பாடிய பல்வேறு படங்களின் பாடல்களை தற்போது அவரது குரலில் நேரில் கேட்க வேண்டும் என்று பல இசைப்பிரியர்கள் விரும்புவதால், அவரது அடுத்த இசை நிகழ்ச்சி குறித்து அறிய அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதை அறிந்துள்ள இளையராஜா, தன்னுடைய ஒவ்வொரு இசை நிகழ்ச்சியில், இந்த ஒரு பாடலையாவது நான் பாட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அது என்ன பாடலாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு இசை ரசிகர்கள் பலர் இளையராஜாவிற்கு பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் "பூமாலையே...தோள் சேரவா... பூமாலையே...தோள் சேரவா..
ஏங்கும் இரு தோள் சேரவா..." என்ற பாடலை பாட வேண்டும் என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார். இன்னொரு ரசிகர், ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்...
புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது ... என்ற பாடலை கேட்டுள்ளார்.இதேபோல் பலரும் கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிலில், "உங்கள் யூடியூப் சேனலில் எல்லா பாட்டும் கேட்டுக்கிறேன் ஐயா. கான்செர்ட் வர அளவுக்கு பண வசதி இல்ல. உங்க இசைக்கு நன்றி. பல வேளைகளில் நிம்மதியை தந்திருக்கிறது. உங்கள் இசையும், அதற்கான பாடல் வரிகளும் அது சுமந்து வரும் குரலும் இணைந்தது தான் எங்களின் கண் காணாத உயிர்! " என்று கூறியுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications