Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடூர விஷம் கொண்ட பாம்பு.. இந்தியாவில் இதை பார்ப்பதே ரொம்ப ரேர்! வெளியான ஷாக் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாம்புகள் மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை 4 வகையான பாம்புகள்தான் மனிதர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கின்றன. இப்படி இருக்கையில் புதிய வகை பாம்பு ஒன்றை வனத்துறை அதிகாரி பார்த்திருக்கிறார். இந்த வகை பாம்புகளை இந்தியாவில் பார்ப்பது ரொம்பவும் அரிதானது. சீனாவில்தான் அதிகமாக இருக்கும். இப்படி இருக்கையில் இந்த பாம்பு தொடர்பான வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் ஷேர் செய்திருக்கிறார்.

வீடியோவில், தண்ணீரில் பாம்பு அழகாக நீந்தி செல்வது தெரிகிறது. இந்த பாம்பு வழக்கத்திற்கு மாறாக, கருப்பு நிறத்தில் மஞ்சள் பட்டைகளுடன் இருக்கிறது. இது ஒருவகையான கட்டுவிரியன் என்று அதிகாரி கூறியிருக்கிறார். இந்த வீடியோவை 1.77 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள்.

snake IFS

அழகும் ஆபத்தும்

பாம்பின் அழகையும் ஆபத்தையும் குறித்து காஸ்வான் பதிவிட்டிருந்தார். "அழகு மிக்க அந்தப் பட்டைகள்.. கட்டம் போட்ட கட்டுவிரியன் இந்தியாவில் காணப்படும் மிகவும் விஷத்தன்மை கொண்ட பாம்பு. இரவு ரோந்தின்போது தற்செயலாகக் கண்டேன். இயற்கை இவற்றுக்கு இத்தகைய தனித்துவமான பட்டைகளை இவ்வாறு வடிவமைத்ததுள்ளது" என்று பதிவிட்டிருக்கிறார். இது இந்தியாவின் மிக விஷமுள்ள பாம்புகளில் ஒன்றாகும்.

விஷ பாம்புகள்

இந்த வீடியோவுக்கு பலரும் ஆச்சரியரும், அச்சமும் நிறைந்த கருத்துக்களை கமெண்ட் செய்திருக்கிறார்கள். ஒருவர், "அந்தப் பட்டைகள் இயற்கையின் பாதுகாப்பு எச்சரிக்கையாக இருக்கலாம்" என்று கூறியுள்ளார். மற்றொருவர், "அழகான பதிவு. நகரும் ஆபத்து குறி போல!" என கமெண்ட் செய்திருக்கிறார்.

முன்னர் சொன்னது போலவே இந்தியாவில் 4 வகையான பாம்புகள்தான் அதிகம் விஷம் கொண்டவை. இவற்றால் ஏற்படும் கடிதான் மரணத்திற்கு காரணமாக அமைகின்றன.

1. நாகப்பாம்பு(நல்ல பாம்பு)
2. கட்டுவிரியன்
3. சுருட்டைவிரியன்
4. கண்ணாடிவிரியன்

கட்டுவிரியன்

இந்த வீடியோவில் இருப்பது ஒருவகையான கட்டுவிரியன் பாம்பு. இதை மஞ்சள் கட்டுவிரியன் என்பார்கள். இவை மேற்கு வங்கம், அசாம், ஒடிசா மாநிலங்களில்தான் பார்க்க முடியும். அதுவும் பகல் நேரங்களில் பார்க்கவே முடியாது. இது இரவாடி வகை பாம்பு. அதாவது இரவில் மட்டுமே நடமாடும். அதேபோல இரவிலும் அடிக்கடி பார்க்க முடியாது. இது சீனாவில்தான் அதிகமாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை கொஞ்சம் ரேரான பாம்பு இது.

மரணம் நிச்சயம்

சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு என விஷமில்லாத பாம்புகளை இது வேட்டையாடும். பசி அதிகமானால் சிறிய கட்டுவிரியன் பாம்புகளை கூட இது வேட்டையாடி சாப்பிடும். இந்த பாம்பு கடித்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படும். இந்த வகை பாம்புகளின் விஷம் மிதமானதுதான். ஆனால், இவை ஒரு கடியில் அதிக அளவு நஞ்சு செலுத்தும் என்பதால் இந்த பாம்பு கடித்தால், உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்கவில்லையெனில் மரணம் நிச்சயம்.

மட்டுமல்லாது இந்த வகை பாம்புகள் கடித்தால் எறும்பு கடித்ததை போலத்தான் இருக்கும். கடித்த இடத்தில் அரிப்பு, வீக்கம் என எதுவும் இருக்காது. கடித்தது தெரியாமல் பலரும் சிகிச்சையை தாமதமாக தொடங்குகிறார்கள். இதுவே மரணத்திற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+