Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம்
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாக புகார் உள்ளது. திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட இது முக்கியமான பிரச்சனையாக இருந்தது. தவெக ஆட்சியிலும் அது தொடர்வதால், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கூறினார். நேற்று சிங்கப் பெண் அதிரடி படை தொடக்க விழா நடைபெற்றது. சிங்கப்பெண் அதிரடி காவல்படை எப்படி செயல்படும் என்று ஐ.ஜி பவானீஸ்வரி விளக்கமளித்துள்ளார்.
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்படும் விதம் குறித்து அந்தப் படையின் ஐஜி பவானீஸ்வரி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்களித்தார். அப்போது அவர் கூறுகையில், "பேருந்து நிலையம், ரயில் நிலையம், பெண்கள் அதிகம் பணியாற்றும் அனைத்து தொழிற்சாலை பகுதிகளில் சிங்கப் பெண் படையினர் ரோந்து பணியில் இருப்பார்கள். அவர்களை டிராக் செய்து, தன்னம்பிக்கையை ஏற்படுத்துவார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இதற்கு முன்பு எங்கெல்லாம் நடந்திருக்கிறது அல்லது நடைபெறலாம் என்பதை கண்டறிவார்கள்.

சிங்கப் பெண் படை செயல்படும் விதம்
அந்தப் பகுதிகளுக்கு சென்று குற்றங்களை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை வேண்டுமோ அதை செய்வார்கள். அந்தப் பகுதி பெண்களுக்கு எப்படி பாதுகாப்பாகும் என்று மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட இதர துறைகளுடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுவோம். காவல்துறை மட்டுமல்லாமல், மற்ற துறைகள் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விழிப்புணர்வு மற்றும் பங்கு இருக்க வேண்டும்.
அப்படியிருந்தால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதனால் விழிப்புணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவோம். மக்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து விழிப்புணர்வு செய்து பெண்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துவோம். மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி பாதுகாப்பை உறுதி செய்வோம். சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படைக்காக முதலமைச்சர் முதல்கட்டமாக ரூ.357 கோடி ஒதுக்கியுள்ளார்.
புதிய பணியிடங்கள்
இந்த சிறப்பு படை மூலம் தமிழ்நாடு காவல்துறைக்கு புதிதாக 2,545 பணியிடங்கள் உருவாகியுள்ளன. இது அனைத்து மகளிர் காவல்நிலையம் உள்ளிட்டோரின் பணிக்கும் உதவியாக இருக்கும். குற்றம் நடக்க கூடாது என்பதற்காகவும், அதை முழுமையாக தடுப்பதற்காகவும் துடிப்புடன் செயல்படும் ஒரு படை தான் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
-
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
டெல்லி புறப்பட்டார் விஜய்! நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications