ஜேஇஇ தேர்வு எழுதாமலே ஐஐடியில் படிக்கலாம்! 75% ஆஃபர் ரெடி! படிக்க நீங்க ரெடியா?
சென்னை: ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதாமலே ஐஐடி மெட்ராசில் சேர்ந்து படிக்க முடியும். அதற்காகப் பட்டப்படிப்புகள் உள்ளன என்று கூறுகிறார் ஐஐடி பேராசிரியர் விக்னேஷ் முத்து விஜயன்.
ஐஐடியில் படிக்க வேண்டும் என்பது பல லட்ச மாணவர்களின் கனவு. ஆனால், அதற்காக நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வை எழுதி, அதில் வெற்றி பெற்றால்தான் ஐஐடி வளாகத்திற்குள் காலடியே எடுத்து வைக்க முடியும்.

இந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது என்பது ஒரு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு எளிதான விசயம் இல்லை. போட்டிகள் மிகுந்த இந்த ஐஐடி வளாகத்திற்கு ஒருநாளாவது கால் வைத்துவிட மாட்டோமா என ஏங்கும் மாணவர்களுக்காக ஒரு புதிய பாடப் பிரிவைக் கடந்த 3 ஆண்டுகள் முன்னதாக தொடங்கி நடத்தி வருகின்றது மெட்ராஸ் ஐஐடி.
அது என்ன படிப்பு? எவ்வளவு செலவாகும்? அதற்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டாம் என்றால், எப்படிச் சேர்ந்து படிப்பது?
இதைப் போன்ற பல்வேறு சந்தேகங்களுக்குச் சரியான பதிலைத் தருகிறார் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் விக்னேஷ் முத்து விஜயன்.
இவர் ஐஐடி மெட்ராசில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்டு அப்ளிகேஷன் என்ற படிப்புக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
அவரது துறை படிப்பு சார்ந்து விக்னேஷ் பேசுகையில், "ஐஐடியில் படிக்க வேண்டும் என்றால் ஜேஇ என்ற நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். அப்போதுதான் ஐஐடி சேர்ந்து படிக்க முடியும். இது ஒரு கடினமான நுழைவுத்தேர்வு. அந்தத் தேர்வைப் பலரால் எழுதி வெற்றி பெற முடியவில்லை.

ஆகவேதான் அதற்கு மாற்றாக இந்த Bs data science and applications என்ற படிப்பைக் கொண்டு வந்தோம். இது ஒரு வித்தியாசமான துறை. இதற்கு ஜேஇஇ தேர்வு எழுதத் தேவையில்லை. தகுதித் தேர்வு என்று ஒன்றை எழுதினால் மட்டும் போதும். நீங்கள் ஐஐடியில் படிக்க முடியும்.
இதை நீங்கள் ஐஐடி மெட்ராஸ் உள்ளே இருந்த படியே நான்கு வாரங்கள் படிக்கலாம். இந்த 4 வாரங்கள் வகுப்புகள் நடக்கும். அதைப் படித்து முடித்த பிறகு அதிலிருந்து ஒரு தேர்வு வைப்போம்.
இந்தப் படிப்புக்காகப் பாடங்களாக ஆன்லைனில் வீடியோக்கள் தரப்படும். ஒவ்வொரு வாரமும் அசைன்மெண்ட் தரப்படும். லைவ் வகுப்புகளில் பங்கேற்று உங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளலாம்.
இந்த 4 வாரங்கள் படிப்பு முடிந்த பிறகு இந்தியா முழுவதும் உள்ள 200 மையங்களில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று பரீட்சையை எழுதலாம். இந்தத் தேர்வுகூட ஞாயிற்றுக் கிழமைகளில்தான் நடைபெறும்.

இந்தத் தேர்வில் 50%க்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்கள் அனைவரும் foundation level படிப்புக்குத் தகுதி பெறுவர். அதை முடித்த பிறகு டிப்ளமோ லெவல். அதை முடித்ததும் டிகிரி லெவல் என படிப்படியாகப் படித்து இறுதியாக, Bs data science and applications என்று பட்டத்தைப் பெறலாம்.
இதைத் தரவு அறிவியல் என்று தமிழில் சொல்கிறார்கள். அதே மாதிரி Software programming applications development என சொல்லக் கூடிய ஆப் உருவாக்குவதற்கான திறமையை இந்தப் படிப்பின் மூலம் பெறலாம்.
இதன்மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைக்கு இந்தத் துறை மிக வேகமாக வளர்ந்துள்ளது. இந்தப் படிப்பைக் கடந்த 3 ஆண்டுகள் முன்னதாக ஐஐடி ஆரம்பித்தது.
இதில் உங்களுக்கு என்ன அனுகூலம் என்றால், பாடங்கள் அனைத்தையும் கற்றுத்தருவது ஆன்லைன் மூலம்தான். நீங்கள் இதற்காக ஐஐடி வளாகத்திற்குத் தினம் வந்து போக வேண்டும் என்ற நிலை இல்லை. ஆனால், பரீட்சையை நீங்கள் மையத்திற்கு வந்து நேரடியாகத்தான் எழுதியாக வேண்டும்.
இதன் பரீட்சைகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நடைபெறும் என்பதால், இதனுடன் சேர்த்து நீங்கள் வேறு பட்டப்படிப்பையும் படிக்க முடியும். அதற்கு அவகாசம் நிறையே கிடைக்கும்.

இந்தப் படிப்பைப் படிக்க வயது வரம்பு கிடையாது. ஆகவே வேலைகளைச் செய்து கொண்டே நீங்கள் படிக்கலாம். இந்தப் படிப்பைப் படிக்க நிறையக் கட்டணச் சலுகைகள் தருகிறோம்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் 1 லட்சம் இருந்தால், அந்த மாணவருக்கு 75% சலுகை அளிக்கின்றோம். ஆண்டுக்கு 5 லட்சம் வரை குடும்ப வருமான உள்ளவர்களுக்கு 50% கட்டண சலுகை தருகிறோம்.
அதனால் ஏழை எளிய மாணவர்கள் கூட இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிதிச்சுமை என்பது இருக்காது" என்கிறார்

-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications