தேனிக்கு எடுத்து செல்லப்படும் பவதாரிணி உடல்.. இறுதி சடங்கிற்கு பின் எங்கு அடக்கம் செய்யப்படுகிறது!
சென்னை: இளையராஜாவின் மகளும், பாடகியுமான மறைந்த பவதாரிணி உடல் இறுதி சடங்கிற்காகத் தேனி மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இளையராஜா மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் ஏற்கனவே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தச் சூழலில் அவர் தான் ஆயுர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றிருந்தார். இருப்பினும், திடீரென அவரது உடல்நிலை மோசமான நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஜனவரி 25ஆம் தேதி மரணமடைந்தார்.
பாவதாரிணி: அவரது மரணத்திற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், பிரபல இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும், பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து தமிழ்நாடு எடுத்து வர நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் பவதாரிணி உடல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது.
அவரது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் பவதாரிணி உடலைப் பெறச் சென்னை விமான நிலையம் வந்திருந்தனர். ஏர்போர்ட்டில் இருந்து பவதாரிணி உடல் தி நகரில் இருக்கும் இளையராஜா வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே உறவினர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என்று பலரும் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தேனிக்கு எடுத்துச் செல்லப்படும் உடல்: இதற்கிடையே இன்றிரவு 10 மணியளவில் பவதாரிணி உடல் இளையராஜாவின் சொந்த மாவட்டமான தேனிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சாலை மார்க்கமாக அவரது உடல் இளையராஜா பங்களா இருக்கும் லோயர்கேம்பிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கே பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இளையராஜாவின் சொந்த ஊர் பண்ணைபுரம். இருப்பினும், அவரது தாய் சின்னத்தாய், அவரது மனைவி ஜீவா ஆகியோரின் நினைவிடம், லோயர்கேம்ப் பங்களா என்ற தோட்டத்தில் தான் உள்ளது.
அவரது தாய் மற்றும் மனைவியின் நினைவுநாள் உள்ளிட்ட நாட்களில் இளையராஜா அங்குச் சென்று தியானம் செய்வார். இதற்கிடையே பவதாரிணி உடலுக்கு நாளை காலை 10 மணிக்கு அங்கே இறுதிச்சடங்கு நடக்க உள்ளது. தொடர்ந்து பவதாரிணி தாய் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
யார் இந்த பவதாரிணி: இளையராஜாவின் மகளான பவதாரிணி ராசய்யா படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அவர் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, தேவா என்று பலரது இசையில் பவதாரிணி பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.இளையராஜா இசையில் பாரதி படத்தில் வரும் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காகத் தேசிய விருதும் கிடைத்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே அவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் இலங்கையில் சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்த போது தான் அவர் காலமானார். அவருக்கு வயது 47. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications