‛‛இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
சென்னை: பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில் ‛‛ஆமா அனைவருக்கும் மேலானவர் தான் இந்த இளையராஜா'' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்தார். இந்த வாதத்தை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் இளையராஜா. இந்நிலையில் தான் இளையராஜா இசையமைத்த 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பாளர்களிடம் உரிமையை பெற்று இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டது.

நீதிமன்றத்தன் இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார். உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் இந்த மேல்முறையீடு விசாரிக்கப்பட்டது. பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளரிடம் உரிமையை பெற்றுள்ளதால் பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி எக்கோ நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 10ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இசை நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛திரைப்படத்துக்காக தயாரிப்பாளரிடம் ஊதியம் பெறும் இசையமைப்பாளர் ராயல்டி தவிர மற்ற அனைத்து உரிமைகளையும் இழந்துவிடுகிறார். இந்த விஷயத்தில் இளையராஜாவுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பது இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும். இளையராஜா தான் தான் அனைவருக்கும் மேலானவர்'' என நினைக்கிறார் என்று தெரிவித்தார்.
இந்த வேளையில் குறுக்கீட்ட இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பரசரண், ‛‛ஆமா இளையராஜா அனைவருக்கும் மேலானவர் தான்'' எனக்கூறினார். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்'' என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ‛‛இசை மூர்த்திகளான முத்துஸ்வாமி தீக்சீதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் எல்லோருக்கம் மேலானவர்கள் என்று கூறலாம். ஆனால், நீங்க் அப்படி சொல்வதை கேட்க முடியாது'' என தெரிவித்தார்.
இதையடுத்து இளையராஜா தரப்பு வழக்கறிஞர், ‛‛எல்லோருக்கும் மேலானவன் எனக்கூறியது, பாடல்கள் மீதான காப்புரிமை விவகாரத்தில் மட்டுமே. மற்றபடி இளையராஜா, தன்னை அப்படி கூறிக்கொண்டது இல்லை என்பது உங்களுக்கே தெரியும்'' என தெரிவித்தார். அதை கேட்ட உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications