மனோஜ் பாரதிராஜாவுக்காக திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா
சென்னை: மறைந்த நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவுக்காக திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் இசைஞானி இளையராஜா மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, தாஜ்மகால் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவர் கடல் பூக்கள், சமுத்திரம், அல்லு அர்ஜுனா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

மேலும் சிம்பு நடித்த மாநாடு படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். கடைசியாக கார்த்தி நடித்த விருமன் படத்திலும் மனோஜ் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து மார்கழி திங்கள் என்ற படத்தை முதல் முறையாக இயக்கினார். இதற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
ரோபோ படம்
ரஜினிகாந்த் நடித்த ரோபோ படத்திலும் அவர் டூப்பாக நடித்திருந்தார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய போது அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கடந்த 8 ஆண்டுகளாக அவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லை.
இயக்குநர் அவதாரமும் தோற்றது
மேலும் இயக்குநர் அவதாரம் எடுத்த போதிலும் அவரால் சோபிக்க முடியவில்லை. இதனால் அதிக அளவில் மன வருத்தத்தில் இருந்ததாக மனோஜே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ள கூட முடிவு செய்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மன அழுத்தம்
ஆனால் அவருடைய மனைவி நந்தனா, மனோஜுக்கு ஆறுதலாக இருந்து அவரை அது போன்ற எண்ணங்களில் இருந்து மீட்டெடுத்தார் என மனோஜ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மனோஜுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
வடபழனி மருத்துவமனை
இதையடுத்து அவர் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதயத்தில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஐசியூவில் இருந்த அவர் அண்மையில்தான் டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்தார்.
மனோஜ் மாரடைப்பால் மரணம்
இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மாலை திடீரென மனோஜுக்கு உடல்நிலை மோசமடைந்து மயங்கினார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்த போது அவர் மாரடைப்பால் ஏற்கெனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கலங்கிய குடும்பம்
இதனால் அவரது குடும்பத்தினர் மிகவும் உடைந்துவிட்டனர். மனைவி, குழந்தைகள், பாரதிராஜா, அவரது மனைவி, உற்றார் உறவினர், ரசிகர்கள், மனோஜுக்கு தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என அவருடைய இறப்பால் கலங்கிவிட்டனர்.
பாரதிராஜா
பாரதிராஜாவால் நடக்ககூட முடியாமல் ஆகிவிட்டார். மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். வெறும் 48 வயதிலேயே இறந்த மனோஜுக்கு கடந்த 26 ஆம் தேதி பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. அவருடைய மகள்கள்தான் செய்ய வேண்டிய காரியங்களை செய்தனர்.
மோட்ச தீபம்
இந்த நிலையில் மனோஜின் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் இளையராஜா மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார். இறந்தவர்கள் நம்முடைய மனதில் எப்போதும் நீங்காமல் நிறைந்திருக்க வேண்டும் என எண்ணி ஏற்றப்படுவதுதான் மோட்சதீபம்.
யாருக்கெல்லாம் மோட்ச தீபம்
இளையராஜா இதுவரை நடிகர் புனித் ராஜ்குமார், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் உள்ளிட்டோருக்கும் மோட்ச தீபம் ஏற்றியுள்ளார். அது போல் எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆன்மா சாந்தியடைய வேண்டியும் இளையராஜா மோட்ச தீபம் ஏற்றியுள்ளார்.
யாருக்கு ஏற்றுவது
பொதுவாக மோட்ச தீபம் என்பது கோயில்களிலோ அல்லது நதிக்கரைகளிலோ ஏற்றப்பட வேண்டியது. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த இந்திய வீரர்களுக்கு சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபடப்பட்டது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications