‘மஞ்சும்மல் பாய்ஸ்' பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்... பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியாக கூறி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன்... பாடலை படத்தில் பயன்படுத்தியதற்காகவும், அதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இளையராஜாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ் இந்த படத்தை பறவா பிலிம்ஸ் சார்பில் சௌபின் சாகிர், பாபு சாகிர், ஷான் ஆண்டனி ஆகியோர் தயாரித்து இருந்தனர்.
சௌபின் சாகிர், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், மலையாள சினிமாவை தாண்டி தமிழ்சினிமா ரசிகர்களாலும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் இந்த படம் பெற்றது.
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளத்தை விட தமிழகத்தில் தான் மிக அதிக வசூலைக் குவித்தது. இதுவரை தமிழ் சினிமாவில் நேரடியாக வெளியான மலையாள திரைப்படம் மிகப்பெரிய வசூலை குவித்தது என்றால பிரேமம் படம் தான். அந்த படத்தின் வசூலை பின்னுக்குத்தள்ளி இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் படைத்தது. இந்த திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறமுக்கிய காரணம் என்னவென்றால், உயிரோட்டமான கதை. உண்மை கதையை அப்படியே நேச்சுரலாக எடுத்தது வெற்றிக்கு காரணமாக இருந்தது.
மஞ்சும்மல் பாய்ஸ் கதை என்னவென்றால், 2006ல் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கேரள இளைஞர்கள், கொடைக்கானல் குணா குகையை சுற்றி பார்க்க சென்றார்கள். அதில் ஒருவர் தவறி விழுந்தார். அவரை அவரது நண்பர்கள் உயிருடன் மீட்டனர். இதுதான் கதையாக எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் கண்மணி அன்போடு காதலன்.. என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடல் குணா படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான மிகப் பிரபலமான காதல் பாடல். அதனை மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் நட்புக்கு உரிய பாடலாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
இந்நிலையில் படம் வெளியான போது, படத்தை பார்த்து வியந்த நடிகர் கமல்ஹாசன், மஞ்சும்மல் பாய்ஸ் பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அவர் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான 'குணா' படமும் தன்னை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்க வைத்ததாக இயக்குநர் சிதம்பரம் நெகிழ்ச்சியுடன் அப்போது கூறியிருந்தார்.
இந்நிலையில் படத்தில் கண்மணி அன்போடு காதலன்.. என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடல் குணா படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான மிகப் பிரபலமான காதல் பாடல் ஆகும். இதுதான் மஞ்சும்மல் படத்தில் நட்புக்கு உரிய பாடலாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். கண்மணி அன்போடு காதலன் பாடல் தான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் உயிர் நாடியாக இருக்கும். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற இந்த பாடலும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியாக கூறி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன்... பாடலை படத்தில் பயன்படுத்தியதற்காகவும், அதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இளையராஜாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications