அப்பதான் மைக்கை பிடிச்சாரு இளையராஜா.. "தூக்கி போட்டுட்டு போயிடுவேன், புரிஞ்சுதா".. அரண்டு போன அரங்கம்

இசைஞானி இளையராஜா மேடையில் கோபப்பட்டு பேசிய வீடியோ ஒன்று ஷேர் ஆகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜாவின் இசை வெளியீட்டு விழா வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஆடியோ லான்ச் விழாவில் இளையராஜா பேசிய பேச்சுக்கள் பலரையும் திரும்பி பார்க்க வைத்தும் வருகிறது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்..

அந்தவகையில், மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த வருடம், ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர்.

அடையாளம்

அடையாளம்

தமிழ் திரையிசையின் அடையாளத்தை மாற்றிய இளையராஜாவுக்கு இந்த நியமன பதவி வழங்கப்பட்டுள்ளது... எனினும் இந்த பதவி கிடைப்பதற்கு முன்பு, இளையராஜா சந்தித்த விமர்சனங்கள் பல்வேறு தாக்கங்களை பொதுத்தளத்தில் ஏற்படுத்திவிட்டு போயிருந்தன. அரசியல் ஒருபக்கம் இருந்தாலும், இளையராஜாவின் மேடைப்பேச்சுக்களும், பேட்டிகளும் சில சமயங்களில் சர்ச்சையாகிவிடுவது உண்டு.. இப்படித்தான் ஒருமுறை, சிம்புவின் 'பீப் பாடல்' குறித்து இளையராஜாவிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த இளையராஜா, ''உனக்கு அறிவு இருக்கா?'' என்று கேள்விஎழுப்பி, வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

 இளையராஜா

இளையராஜா

இளையராஜாவின் இந்த கோப வீடியோ அப்போது இணையத்தில் வெளியாகியிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.. அந்தவகையில், இளையராஜாவின் கோபமும் "புகழ்" பெற்றதாகிவிட்டது... அதுபோலவே, தன்னுடைய இசை நிகழ்ச்சிகளில், தன்னையும் மீறி அவ்வப்போது அவர் கோபத்தை வெளிப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. அப்படித்தான் இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி நடித்திருக்கும் 'விடுதலை' படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இளையராஜாவும் கலந்து கொண்டார்.

 நடிகர் சூரி

நடிகர் சூரி

அப்போது அவர் பேசியபோது, "இந்தப்படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத களத்தில் நடக்கும்... அவருடைய ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதை. 1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு இதை சொல்கிறேன் என்றால் நீங்கள் புரிஞ்சிக்கணும்.. வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த நல்ல இயக்குநர்... இந்தப் படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையை கேட்பீர்கள்" என்று பூரித்து சொன்னார்.. இதை கேட்டதும், அரங்கத்தில் இருந்தவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்..

 ராஜா டென்ஷன்

ராஜா டென்ஷன்

தொடர்ந்து கரவொலியும் விசில் சத்தமும் பறந்ததால், டென்ஷன் அடைந்த இளையராஜா, 'இப்படி சத்தம் போட்டுட்டு இருந்தீங்கன்னா, மைக்கை தந்துட்டு நான் போயிட்டே இருப்பேன்.. கத்தாதே, நான் மைக்கை தந்துட்டு போயிட்டே இருப்பேன்' என்றார். இளையராஜா கோபப்பட்டதுமே பக்கத்தில் இருந்த வெற்றிமாறனும், மற்றவர்களும், அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.. நடிகர் சூரியும், "சத்தம்போட வேண்டாம்" என்று சைகையால் அங்கிருந்தவர்களை கேட்டுக் கொண்டார். இதற்கு பிறகு, இளையராஜா தன் பேச்சை தொடர்ந்தார். இளையராஜா ஒருசில வினாடிகள் கோபப்பட்ட இந்த வீடியோவைதான் சிலர் இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

 நிழலும் நிஜமும்

நிழலும் நிஜமும்

இளையராஜா கோபப்பட்டு பேசிய, இப்படி எத்தனையோ வீடியோக்கள் வெளிவந்தாலும், அவை எதுவுமே இளையராஜாவின் இசை கொண்டாடப்படுவதை தடுக்கவில்லை என்பதே உண்மை.. ரசிகர்கள் என்றில்லை, எந்த பிரபலங்களை இளையராஜா கடிந்து கொண்டாலும்கூட, அவர்களில் ஒருத்தருமே எதிர்வினையாற்றியதில்லை.. இளையராஜா என்ன திட்டினாலும், அவரது ரசிகர்களும் கோபிப்பதும் இல்லை;.. அவைகள் அனைத்தையுமே எல்லைமீறிய உரிமையாகவே எடுத்து கொள்கிறார்கள்.. அதைவிட முக்கியமாக, ரசிகர்களின் காதுகள், இளையராஜாவின் இசைக்கு மட்டுமே பழக்கப்பட்டுவிட்டன என்பதுதான் யதார்த்தமான நிஜம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+