‘டியூட்’ படத்திலும் அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்தியுள்ளனர்.. நீதிமன்றத்தில் சொன்ன இளையராஜா
சென்னை: தற்போது வெளியாகி திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வரும் 'டியூட்' என்ற திரைப்படத்தில் கூட தனது இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு உள்ளதாக இளையராஜா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதீப் ரங்கநாதன் தந்துள்ள 'டியூட்' படத்தில் ஒரு காட்சியில் நடிகை மமிதா பைஜூ இளையராஜா பாடல் ஒன்றிற்கு நடனமாடியிருந்தார். இந்தக் காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், அந்த இளையராஜா பாடல் மீண்டும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பு வழக்கறிஞர், 'டியூட் திரைப்படத்திலும் இளையராஜாவின் 2 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.

சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம், எக்கோ ரெகார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இசையமைப்பாளர் இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விபரங்களை சோனி நிறுவனம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, வழக்கில் சோனி நிறுவனம் இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை என்றும், தற்போது வெளியாகியுள்ள 'டியூட்' என்ற திரைப்படத்தில் கூட இளையராஜாவின் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சோனி நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், சோனி நிறுவனம் ஈட்டிய வருவாயை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் இளையராஜாவின் 500கும் மேற்பட்ட இசை அமைப்புகளின் காப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு இளையராஜா பதிலளிக்க உச்சநீதிமன்றம் உதரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது சீலிட்ட கவர்களில் விவரங்களை பெறக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாக இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ் பிரபாகரன் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி என். செந்தில் குமார், Dude திரைபடம் தொடர்பாக தனியாக வழக்கு தொடர மனுதாரருக்கு அறிவுறுத்தினார். மேலும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் சீலிட்ட கவரில் பெறப்பட்ட விவரங்களை திரும்ப ஒப்படைத்தார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications