இளையராஜாவையே பயமுறுத்திட்டாங்களே.. ராஜைய்யாவுக்குதான் ஜீவா.. "இசை ராட்சசன்" ராஜாவின் ராஜாங்கம் - வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைஞானி இளையராஜாவின் பிளாஷ்பேக் சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை ராஜா சாரின் ரசிகர்கள், பூரித்துபோய் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

இசையை வைத்து படத்தையே வெற்றி பெற வைப்பதில் அதிதிறமைசாலி இசைஞானி இளையராஜா. இவரது இசைக்காகவே சினிமாவை பார்த்தது இந்த தமிழகம். வழக்கமான பாணி என்றில்லாமல் புதுசு புதுசாக, தினுசு தினுசான வித்தியாசமான தளத்தில் பரிசோதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது அவரது இசைத்தேடல்.

Ilayaraja the Great and Do you know how Ilayaraja married Jeeva, Sweet Memories

சிட்டுக்குருவி: இதற்கு "சிட்டுக்குருவி" படத்தை போல இன்னும் எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.. இப்போதுவரை எத்தனையோ சர்ச்சைகள், முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் இளையராஜா மீது இருக்கவே செய்கிறது..

இளையராஜா கோபப்பட்டு பேசிய, எத்தனையோ வீடியோக்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.. ஆனால், அவை எதுவுமே இளையராஜாவின் இசை கொண்டாடப்படுவதை தடுக்கவில்லை என்பதே உண்மை..

ரசிகர்கள் என்றில்லை, எந்த பிரபலங்களை இளையராஜா கடிந்து கொண்டாலும்கூட, அவர்களில் ஒருத்தருமே எதிர்வினையாற்றியதில்லை.. இளையராஜா என்ன திட்டினாலும், அவரது ரசிகர்களும் கோபிப்பதும் இல்லை;.. அவைகள் அனைத்தையுமே எல்லைமீறிய உரிமையாகவே எடுத்து கொள்கிறார்கள்.. அதைவிட முக்கியமாக, ரசிகர்களின் காதுகள், இளையராஜாவின் இசைக்கு மட்டுமே பழக்கப்பட்டுவிட்டன என்பதுதான் யதார்த்தமான நிஜம்..!!

இளையராஜா: இதைதான் சீமான் ஒருமுறை சொல்லியிருந்தார்.. சமீபத்தில் இளையராஜா பிறந்த நாள் விழாவில் சீமான் பேசும்போது, "செவிக்கு உணவளித்து, எங்களை பசியையே மறக்க வைத்தவர் இளையராஜா.. செவி உள்ள மானுடர்கள் இந்த மண்ணில் பிறக்கும்வரை எங்கள் இசைத்தகப்பன் இளையராஜாவின் இசையும் இருக்கும்.. புகழும் இருக்கும்" என்றார் பூரித்துபோய். இதுதான் நிதர்சனம் - இதுதான் நிஜம்.

இந்நிலையில், இளையராஜாவின், "தித்திப்பு பிளாஷ்பேக்" ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. தன்னுடைய திருமணத்துக்கு தன் தாயார் ஏற்பாடு செய்தவிதம் குறித்தும், தன்னை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்த விதம் குறித்தும் இளையராஜா அதில் சொல்லி உள்ளார்.

இனிக்கும் நிகழ்வு: "எனக்கு சீக்கிரமாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில், அம்மா மிகவும் பிடிவாதமாக இருந்தார்... அமர் - கலா காதல் தீவிரமாகி வந்ததும், இதற்கு ஒரு காரணம். என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க, அம்மா ஒரு வழியை கண்டுபிடித்தார்.. "எனக்கும் வயசாச்சு. இப்படியே தினமும் உங்களுக்கு சமைச்சுப் போட எத்தனை நாள் முடியுமோ? அதனால் காலா காலத்திலே...'' என்று அம்மா கூறிக்கொண்டிருக்கும்போதே நான் எழுந்து விடுவேன்.

என் அக்காவுக்கு முதல் குழந்தையாக பெண் குழந்தை (ஜீவா) பிறந்தபோது, அதன் ஜாதகத்தை என் அப்பா பார்த்திருக்கிறார்.. "இந்தக் குழந்தையைத்தான் ராஜையாவுக்கு கட்டி வைக்கவேண்டும்'' என்று உத்தரவு போட்டுவிட்டு போய்விட்டார்களாம். அதை அம்மா என்னிடம் சொல்லி அடிக்கடி பயமுறுத்துவார்.

ஜீவா குழந்தை: ஜீவா பிறந்து, சிறு குழந்தையாக இருந்தபோதே, அதை பார்த்துக்கொள்ளும்படி அக்கா என்னிடம்தான் சொல்லுவாங்க. நான்தான் பார்த்துக் கொண்டேன் - நான்தான் வளர்த்தேன் - ஒரு தாய், சிறு குழந்தைக்கு செய்யும் அத்தனையும் நான்தான் ஜீவாவுக்கு செய்தேன். அம்மாவிடம் மேற்கொண்டு மறுத்து பேசமுடியாத கட்டம் வந்தது. திருமணம் செய்து கொள்ள நான் சில நிபந்தனைகளை அம்மாவிடம் சொன்னேன்.

"அதை பார்க்கவேண்டும், இதை பார்க்க வேண்டும், சினிமாவுக்குப் போகவேண்டும், அங்கே போகவேண்டும், இங்கே போகவேண்டும் என்றெல்லாம் எல்லா பெண்களும் கணவன்மாரிடம் வற்புறுத்துவார்கள். அதுமாதிரி என்கிட்ட சொல்லக்கூடாது. எனக்கு முதலும், இரண்டாவதும், மூன்றாவதும் இசைதான். அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம்'' என்றேன். நான் இப்படி சொன்னது என் அக்காவுக்கும் தெரிந்துவிட்டது. அவரும், தன் மகளை பயமுறுத்தியிருப்பார்கள் போலிருக்கிறது!

ஈசன் செயல்: எல்லாம் ஈசன் செயலே. கல்யாணம் நிச்சயம் ஆயிற்று, என்னைக் கேட்காமலேயே! அண்ணன் பாவலரும், அத்தானும், அம்மாவும் கலந்து பேசி, 1972 மே 22-ந்தேதி எனக்கும், ஜீவாவுக்கும் திருமணம் என்று நிச்சயித்து விட்டார்கள்" என்று நினைவுகூர்ந்திருந்தார் இளையராஜா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+