பவதாரணி செய்த சின்ன மிஸ்டேக்.. விஷமாக மாறியது.. தப்பி தவறியும் இதை பண்ணிடாதீங்க மக்களே
சென்னை: இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணியின் மறைவு திரை உலகை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நேற்று அவருடைய இறுதி சடங்கு நடந்து முடிந்தது. ஆனாலும் கடந்த மூன்று தினங்களாக அவர் குறித்து செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இளையராஜாவின் செல்ல மகளாகவும் பண வசதியில் குறைவில்லாமல் இருந்தாலும் பவதாரிணிக்கு நான்காவது ஸ்டேஜ் வரைக்கும் புற்றுநோய் இருப்பதே தெரியாமல் இருந்திருக்கிறது. அதற்கு காரணம் அவர் செய்த சின்ன சின்ன மிஸ்டேக் தான். அதனால் இனி யாரும் அது போன்ற தவறுகளை அலட்சியமாக செய்து விடாதீங்க என்பதுதான் இந்த செய்தியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

அமைதியான சுபாவத்தை கொண்ட பவதாரிணியின் பாடல்கள் பலருடைய சோகத்தை கரைத்து மனதை லேசாக்க கூடியது. பவதாரிணி இசை வாரிசாக இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் பாடுவதற்கு பெரிய அளவில் அவருடைய தந்தை சம்மதம் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். ஆனாலும் அதற்குப் பிறகு அவருடைய திறமையை பார்த்து திரைப்படங்களில் பாடுவதற்கு இளையராஜா சம்மதித்திருக்கிறார்.
வீட்டில் செல்ல பிள்ளையாக இருந்த பவதாரிணி தன்னுடைய அப்பா மற்றும் அண்ணன்களுக்கு இடையே அன்பு பாலமாகவும் இருந்திருக்கிறார். தன்னுடைய அண்ணன்கள் அப்பாவிடம் எது பேச வேண்டும் என்றாலும் பவதாரிணியிடம் சொல்லித்தான் சம்மதம் வாங்குவார்களாம். அப்படி ஒரு செல்லப் பிள்ளையாக இருந்த பவதாரிணிக்கு சில வருடங்களுக்கு முன்பே கணையத்தில் கல்லடைப்பு இருந்திருக்கிறது.
பிறகு அதற்கு ஆபரேஷன் செய்து அதை நீக்கி இருக்கிறார்கள். அதற்கு பிறகு சில நேரங்களில் அவருக்கு வயிறு வலி வந்திருக்கிறது. வயிறு வலி வரும்போது அவர் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் சில மருந்து மாத்திரைகளை எடுத்து இருக்கிறார். அது அந்த நேரத்திற்கு தீர்வு தந்தாலும் உள்ளிருந்த புற்று நோயை வேகமாக வளர செய்து இருக்கிறது. உடல் எடை குறைந்த போதும் கூட பவதாரணி அது குறித்து பெரியதாக வெளியே காட்டிக்காமல் இருந்திருக்கிறார்.
நமக்கு எதுவும் நடக்காது என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருப்பது போலத்தான் பவதாரிணியும் நம்பி இருக்கிறார். அதனால் தான் தனக்கு வந்த சின்ன சின்ன வலி வேதனைகளை கூட அந்த நேரத்திற்கு ஏதாவது மருந்து மாத்திரைகளை எடுத்து அதை குறைந்தது அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார். கடைசியில் ரொம்பவும் முடியாமல் ஆன போது தான் பவதாரிணிக்கு மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்திற்கு புற்றுநோயில் நான்காவது கட்டத்தில் பவதாரணி இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.
கதறி அழுத பாரதிராஜாவுக்கு துக்கத்தோடும் இளையராஜா சொன்ன வார்த்தை.. கண் கலங்க வைத்த காட்சி
இந்த செய்தி எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் இது போன்று நமக்கு என்று வரும் சின்ன சின்ன வலி வேதனைகளை கூட நம்ம அந்த நேரத்திற்கு தீர்க்கிற மாதிரி ரோஸ் கலர் டானிக், பச்சை கலர் மாத்திரை, மஞ்சள் கலர் மாத்திரை என்று கலர்கலராக மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்வதுதான் வாடிக்கையாக இருக்கிறது.
ஆனால் அது பிறகு எவ்வளவு பெரிய பிரச்சனையை கொடுக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் நமக்கு எதுவும் நடக்காது என்ற ஒரே ஒரு நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு நம்முடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது பவதாரிணியை பார்த்த பிறகு எல்லோருக்கும் ஒரு பயம் வந்திருக்கிறது. எவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தாலும் சில பிரச்சனைகள் தீர்க்க முடியாமல் போயிருக்கிறது.
அதுபோல இந்த செய்தி மூலம் உங்களிடம் சொல்வது ஒன்றுதான். தலைவலியாக இருந்தாலும் சரி, வயிறு வலியாக இருந்தாலும் சரி, கால் வலியாக இருந்தாலும் சரி ஒரு நாள் வலிக்கிறது என்றால் பரவாயில்லை பிறகு அந்த வலி தொடர்கிறது என்றால் அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. நாம் நம்முடைய தாத்தா, பாட்டி போல சத்தான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக எல்லாம் இப்போது இல்லை.
கிடைக்கிற உணவுகளை அவசரமாக சாப்பிடும் ஒரு அவசர உலகத்தில் தான் இருக்கிறோம். அதனாலேயே நம்முடைய உடல் வேகமாக தளர்வடைந்து கொண்டிருக்கிறது. அதை முறையாக பயன்படுத்தி நம்மை மட்டும் அல்லாமல் நம்மோடு இருக்கும் நம்முடைய அன்பானவர்களையும் பாதுகாத்துக் கொள்வோம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications