கதறி அழுத பாரதிராஜாவுக்கு துக்கத்தோடும் இளையராஜா சொன்ன வார்த்தை.. கண் கலங்க வைத்த காட்சி
சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று முன்தினம் உடல்நல குறைவால் காலமான நிலையில் இன்று அவருடைய உடல் தேனியில் இளையராஜாவின் பண்ணை வீட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது பவதாரணியின் உடலை பார்ப்பதற்காக பாரதிராஜா தள்ளாடியபடி வந்து கதறி அழுது இருக்கிறார். இது காண்போரை கண் கலங்க வைத்திருக்கிறது.
தன் மகள் இறந்த சோகத்தில் மனதில் துக்கத்தை அடக்கி கொண்டிருக்கும் இளையராஜா, பாரதிராஜா அழும் போது அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த உருக்கமான காட்சிகள் அங்கிருந்த அனைவரையும் மேலும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

தமிழ் திரைப்பட உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி இலங்கையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.
தற்போது பவதாரிணியின் உடல் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பவதாரணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
அதற்கு பிறகு பல மருத்துவர்களிடம் பார்த்தும் குணமாக்க முடியாத நிலையில் பவதாரிணி இருந்த நிலையில் தான் அவருக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரை உலகையே சோகத்தில் அழுத்தி இருக்கிறது. இதன் பின்னர் பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து தேனி மாவட்டம் பண்ணைபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு அடக்கம் செய்ய வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இளையராஜாவின் நண்பரான பாரதிராஜா பவதாரணியின் உடலை பார்க்க, தன்னால் நடக்க முடியாத நிலையிலும் தள்ளாடியபடி அங்கு வந்து பவதாரிணியின் உடலை பார்த்து, " பவ்தா அப்பா வந்திருக்கேன் மா" என்று கதறி அழுது கொண்டு இருந்திருக்கிறார்.

அப்போது தான் பெற்று, கையில் தூக்கி கொஞ்சி விளையாடி மகளின் உயிர் அற்ற உடலை பார்த்து... சோகமும் துக்கமும் தன் நெஞ்சம் முழுக்க நிறைந்திருந்தாலும், தன்னுடைய நண்பன் பாரதிராஜா அழும்போது பாரதிராஜாவுக்கு இளையராஜா ஆறுதல் கூறியிருக்கிறார். அதோடு பவதாரிணியின் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டகத்தின் அருகிலேயே இளையராஜா அமர்ந்திருந்து தன்னுடைய மகளின் முகத்தை உற்றுப் பார்த்தபடி அமைதியாக சிறிது நேரம் பார்த்து இருக்க, பவதாரிணி சகோதரர்களும் சுற்றி நின்று பவதாரணியின் உடலை பார்த்து கண்கலங்கி கொண்டு இருக்கிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications