சுப்மன் கில்லை கூட்டிட்டு வாங்க.. 24 மணி நேரத்துல விளையாட வைக்குறேன்! தணிகாசலம் விட்ட சவால்
சென்னை: டெங்கு காய்ச்சல் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் உள்ள இந்திய பேட்ஸ்மேன் சுப்மன் கில்லை தன்னிடம் அழைத்து வந்தால் அடுத்த போட்டியில் ஆட வைப்பதாக தணிகாசலம் தெரிவித்து உள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் கடந்த வியாழன் அன்று தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் மீண்டும் இந்திய அணி வெற்றிபெற்று தாய் மண்ணில் கோப்பையை தூக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்த அணியில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா உள்ளார்.

அனுபவ வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, முஹம்மது ஷமி, பும்ரா, கே.எல்.ராகுல் ஆகியோரும் இடம்பெற்று உள்ளனர். பேட்டிங் வரிசையில் சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், பந்துவீச்சாளர்கள் முஹம்மது சிராஜ், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், அக்ஷர் பட்டேல் காயம் காரணமாக கடைசி நேரத்தில் நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக தமிழ்நாட்டை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணியில் கோலி, ரோகித் ஷர்மாவை தவிர்த்து பேட்டிங்கில் நம்பிக்கையான வீரராக திகழ்ந்தவர் சுப்மன் கில். தொடக்க வீரரான அவர், 2023 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார். ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இவரால், இந்திய அணி உலகக்கோப்பையை நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை பலருக்கு இருந்தது.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக சென்னைக்கு வந்த அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர் அதிலிருந்து மீண்டு வராததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால், அவர் பூஜ்ஜியம் ரன்களில் ஆட்டமிழந்தபோதுதான் சுப்மன் கில் மட்டும் இருந்திருந்தால்.. என அவரது பெருமையை பலர் பேசினர். அடுத்து இந்தியா அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியில் விளையாடுவதற்காக டெல்லி சென்று உள்ளது.
அவர்களுடன் சுப்மன் கில் செல்லவில்லை என்பதால் அந்த போட்டியிலும் அவரால் விளையாட முடியாது என்றே தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஓரிரு நாட்களில் அவர் குணமடைந்துவிடுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சி பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தியின் கமெண்டில் ஒரு நபர் இயற்கை மருத்துவர் என்று கூறிக்கொள்ளும் தணிகாசலத்தை டேக் செய்திருந்தார். உடனே தணிகாசலமும், "அணுகினால் 24 மணிநேரத்தில் ஆட்டத்தில் பங்கேற்று ஆடும் அளவில் குணமாக்க முடியும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications