நிர்வாண ரேவ் பார்ட்டி நடத்திய கும்பல்.. தமிழக பார்டரில் போட்ட ஆட்டம்.. சுற்றி வளைத்த போலீஸ்- பின்னணி
சென்னை: தமிழ்நாடு கர்நாடக பார்டரில் நிர்வாணமாக ரேவ் பார்ட்டி நடத்திய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த சீக்ரெட் தகவல் மூலம் மொத்த கும்பலும் கைது செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடகா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் சில ரிசார்ட்களில் ரேவ் பார்ட்டிகள் நடப்பதாக சமீப நாட்களாகவே புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. அதாவது போதை பொருள் பயன்படுத்தி இரவு முழுக்க நிர்வாணமாக நடனம் ஆடுவது. நடனம் ஆடும் பெண்களுக்கு பணம் கொடுப்பது என்று மிக மோசமான பார்ட்டிகளை சிலர் நடத்துவதாக சமீப காலமாக புகார் எழுந்து வருகிறது.
இதில் அதிக அளவில் பணம் புழங்குவதாகவும், போதை பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. இது போன்ற கும்பல்களை கண்டுபிடிக்க அவ்வப்போது தமிழ்நாடு போலீசும், கர்நாடக போலீஸ் தரப்பும் எல்லை ஓரத்தில் இருக்கும் ரிசார்ட் பகுதிகளில் சோதனைகளை செய்வது வழக்கம்.

கைது
இந்த நிலையில்தான் கர்நாடகா தமிழ்நாடு எல்லைப்பகுதியில் பெங்களூரு நகரில் உள்ள ஆனெக்கல் என்ற இடத்தில் நேற்று மிகப்பெரிய ரேவ் பார்ட்டி கும்பல் கைது செய்யப்பட்டது. இங்கே இருக்கும் ரிசார்ட் ஒன்றில் கும்பல் ஒன்று போதை பொருட்களை பயன்படுத்தியதும், பல பெண்கள் நிர்வாணமாக நடனம் ஆடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக போலீசார் இந்த கும்பலை நேற்று இரவோடு இரவாக கைது செய்தனர்.

எத்தனை பேர்
மொத்தம் 35 பேர் இந்த கும்பலில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று போலீசாரை பார்த்ததும் சிலர் பைக்கில் தப்பி செல்ல முயன்று இருக்கிறார்கள். அவர்களை கர்நாடக போலீசார் பார்டர் ஓரத்தில் துரத்தி பிடித்து கைது செய்தனர். சர்ச்சிங், சேசிங் என்று நேற்று பெரிய போராட்டத்திற்கு பின் இந்த கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். நேற்று சில பேர் போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆகி தலைமறைவானார்கள். இவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

போலீசுக்கு தகவல்
போலீசுக்கு வந்த சீக்ரெட் தகவல் ஒன்றின் மூலம் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனெக்கல் அடுத்துள்ள தனியார் ரிசார்ட்டில் போதை பொருள் விற்கப்படுவதாகவும், அங்கு ரேவ் பார்ட்டி நடப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நடந்த சோதனையின் முடிவில் மொத்த கும்பலும் கைது செய்யப்பட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட 35 பேரில் பெரும்பாலான நபர்கள் பெங்களூரில் பல்வேறு பகுதிகளில் ஐடி கம்பெனிகளிலும் மற்ற பெரிய கம்பெனிகளிலும் வேலை பார்ப்பவர்கள்.

எப்படி சேர்ந்தனர்?
ஹை ஆப்(highapp.com) என்ற செயலி மூலம் இவர்கள் இந்த பார்ட்டியை நடத்தி உள்ளனர். இதில் பார்ட்டிகள் குறித்த தகவல்களை வெளியிடலாம். பிறர் நடத்தும் பார்ட்டிகளில் பணம் செலுத்தி கலந்து கொள்வதற்காக முன் பதிவு செய்து கொள்ளலாம். இதை பயன்படுத்தி ஆனெக்கல் பகுதியில் இவர்கள் பார்ட்டி நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் பதிவு செய்தவர்களின் விவரங்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.

திட்டம்
குழுவாக பல்லாயிரம் ரூபாய் பணம் கட்டி இவர்கள் ரேவ் பார்ட்டி நடனத்திற்கு ஏற்பாடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் பெண்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். நிர்வாண நடனத்தில் ஈடுபட்ட பெண்களும், ஹோட்டல் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணைக்கு பின் இந்த ரிசார்ட்டிக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தற்போது காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications