பல லட்சம் பேர் வருவாங்க.. சிக்கல்.. நீதிபதி சுவாமிநாதன் சொன்னது என்ன? தமிழக அரசு பிடித்த பாயிண்ட்
சென்னை: பொது ஒழுங்கை மதிப்பிடவும் பராமரிக்கவும் மாநிலமே சிறந்த அதிகாரம் கொண்ட அமைப்பு. அரசு தனது கடமையில் தவறினால், நீதிமன்றம் தலையிட்டு பொது ஒழுங்கைப் பாதுகாக்கலாம். நீதிபதி சுவாமிநாதன் உத்தரவால் பொதுஒழுங்கு கெட்டுவிட்டது. அவரின் உத்தரவால் பொது அமைதி உருவாவதற்கு பதிலாக.. கெட்டுவிட்டது.. சூழ்நிலை மோசமாகி உள்ளது, என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் வழக்கில் முக்கியமான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற இருவர் பெஞ்ச் அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இன்று அனைத்து தரப்பு வாதங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று 2 தரப்பு அமர்வு குறிப்பிட்டு உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை இருநீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு வந்தது. அனைத்து மேல்முறையீடுகளும் நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளன.
மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங்
திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை மாவட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவைச் சுட்டிக்காட்டிய அவர், விளக்கு ஏற்றுவதன் நோக்கம். ஆனால் அதை தீபத்தூண் மீதுதான் ஏற்ற வேண்டும் என்கிறார்கள். அங்கே ஏற்றிய வழக்கமே இல்லை.
தீபத்தூண் என்ற சொல் ரிட் மனுதாரர்களின் அசல் கோரிக்கையிலோ அல்லது முந்தைய வழக்குகளிலோ ஒருபோதும் இல்லை என சிங் வாதிட்டார். இந்தக் கருத்து நீதிமன்றத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது, வழக்கில் தொடர்புடைய தரப்பினரால் எழுப்பப்படவில்லை என்றார்.
தீபத்தூண் வார்த்தையே இல்லை
இந்த தூணுக்கு செல்லப்படும் இடத்திற்கு படிகள் வழியாக செல்ல வேண்டும். இந்த படிகள் இஸ்லாமிய சொத்துக்குரியவை. ஆனால் தனி நீதிபதி அதை கருத்தில் கொள்ளவில்லை. அருகிலுள்ள தர்காவின் உரிமைகளைப் பாதிக்காமல் விளக்கை ஏற்ற முடியுமா என்பதை உத்தரவு கருத்தில் கொள்ளவில்லை என்றும் வாதிட்டார்.
பொது ஒழுங்கை மதிப்பிடவும் பராமரிக்கவும் மாநிலமே சிறந்த அதிகாரம் கொண்ட அமைப்பு. அரசு தனது கடமையில் தவறினால், நீதிமன்றம் தலையிட்டு பொது ஒழுங்கைப் பாதுகாக்கலாம். நீதிபதி உத்தரவால் பொதுஒழுங்கு கெட்டுவிட்டது. அவரின் உத்தரவால் பொது அமைதிக்கு பதிலாக.. சூழ்நிலை மோசமாகி உள்ளது., என்று வாதம் வைத்தார்.
இதற்கு நீதிபதி ஜெயசந்திரன், நீங்கள் இதை கோர்ட்டில் கூறினார்களா? நீதிபதியிடம் இதை பற்றி கூறினீர்களா?, என்று கேட்டார். இதற்கு சிங், எங்களுடைய பல வாதங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.
விளக்கு ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டால், லட்சக்கணக்கானோர் அந்த குறுகிய படிகளைப் பயன்படுத்த முயற்சிப்பார்கள் என சிங் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். இத்தகைய நிலைமை கடுமையான சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கும். ஒரு குறிப்பிட்ட அனுமதி கூட, இயற்கையாகவே ஏராளமான பக்தர்களை மலைக்கு ஈர்க்கும் எனவும் அவர் வாதிட்டார்.
தனி நீதிபதி லட்சக்கணக்கான மக்களை மலைக்குச் செல்ல உத்தரவிடவில்லை என நீதிமன்றம் பதிலளித்தது. அந்த உத்தரவு, கோயில் நிர்வாகிகளை விளக்கு ஏற்றுமாறு மட்டுமே அறிவுறுத்தியதாக தெளிவுபடுத்தியது.
ஆனால், விளக்கு ஏற்றப்படுவதை ஒரு சைகையாகக் கருதி, நடைமுறையில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவார்கள் என சிங் மறுத்துரைத்தார். இதுவொரு பெரிய நடைமுறைச் சவால் என்றார். இந்த வழக்கில் தொடர்ந்து தீவிரமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications