என்ன அண்ணாச்சி.. இப்படி அரைகுறையா பேசிட்டு போனா எப்படி அண்ணாச்சி!
சென்னை: சன் டிவியில் வாராவாரம் இமான் அண்ணாச்சி நடத்தி வரும் சொல்லுங்கண்ணே சொல்லுங்க படு பிரசித்தி. எங்கோ இருந்த அண்ணாச்சியை உலகத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியது இந்த நிகழ்ச்சிதான்.
அடிச்ச காத்துல கோயில் கோபுரத்துல உட்கார்ந்த மாதிரி மிகப் பெரிய இடத்தை உலகத் தமிழர்கள் மனதில் பிடிச்சுசுட்டார்னாலும், மிகவும் திறமைசாலி.

ஒரு நல்ல நிகழ்ச்சியை இவருக்கு என்று இவரது பாணியில் திட்டமிட்டு கொடுத்துட்டா, அந்த நிகழ்ச்சி டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்ட்ல எகிறும் . ஆனால் வர வர இது வெறும் வெட்டிப் பொழுதுபோக்கு போல மாறி வருகிறது.
அண்மையில்அண்ணாச்சி சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியை பூம்புகாரில் நடத்தினார். பூம்புகார் கடற்கரையில் கூடி இருந்த மக்களிடம் கேள்விகளை கேட்டார்.ஆமா, பூம்புகார் எங்க இருக்குன்னு கேட்டார் அண்ணாச்சி, சீர்காழி பக்கத்துல என்கிறார் ஒருவர். என்ன ஊரு என்று மறுபடியும் கேட்டார் அண்ணாச்சி.
சிதம்பரம், சீர்காழி வரிசையில அண்ணாச்சின்னு சொன்னார் இவர். இன்னொருவர் பக்கத்துலதான் அண்ணாச்சி திருக்கடையூர் இருக்குன்னு வேலை மெனக்கெட்டு சொன்னார்.
ஆமா, பூம்புகாரைத் தாண்டி போனா திருக்கடையூர் இருக்குன்னு சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு நிகழ்சசிக்கு போயிட்டார். மொத்தத்துல அண்ணாச்சி பூம்புகார் பெருமையையும் சொல்லலை, திருக்கடையூர் பெருமையையும் சொல்லலை. அதையும் சொல்லியிருந்தால் மக்களுக்கு நல்ல உபயோகமான தகவல் கிடைச்சிருக்கும்ல.
திருக்கடையூரில் அபிராமி, அமிர்தகடேஸ்வரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயில். 60 ம் கல்யாணம் செய்துகொள்ளும் தம்பதிகள் முதலில் இங்கு செல்வது ஐதீகம். சிலர் இந்த கோயிலிலேயே 60ம் கல்யாணமும் செய்து கொள்வார்கள்.
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களோ, தொகுப்பாளர்களோ ஒரு ஊரில் எது பிரசித்தி பெற்றதோ அதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா, இனி வரும் தலைமுறைகள் இதை எல்லாம் எப்படி தெரிந்துகொள்வார்கள்?
ஒரு நிகழ்ச்சி நடத்தினால் அதில் சமூக அக்கறையுடன் நம்மால் முடிந்ததை முடிந்தவரை சொல்லணும்தானே... அதை விட்டுட்டு டைம் பாஸுக்காக பேசினால் எப்படி அண்ணாச்சி!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications